சம்பந்தன், மனோ, அசாத் சாலி ஆகியோர் புதிய கூட்டணியில்
சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகியன இணைந்து கூட்டணி ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்துள்ளன.
முல்லைத்தீவில் இராணுவத்திடமிருந்து காணியை மீட்க போராடியவர் திடீர் மரணம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் படையினர் நிலை கொண்டிருக்கும் தன்னுடைய காணியை தன்னிடமே வழங்குமாறு கோரி வந்த உரிமையாளர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
லிபியாவில் கைப்பற்றிய 11 விமானங்களை கொண்டு அமெரிக்க மீது தாக்க திட்டமா ? அமெரிக்க அதிர்ச்சி செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்கர்களுக்கு ஒரு கறுப்பு தினம். கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திததி தீவிரவாதிகளால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் விமானம் மூலம்
அமெரிக்கன் பகிரங்க சுற்றுப் போட்டிகளில் அரை இறுதி ஆடங்களில் பெரிய தலைகள் வீழ்ச்சி
அரை இறுதி ஆட்டங்களில் முதல்தர ஆட்டக்காரர் ட்ஜோகொவிச் ஜாப்பானிய வீரர் நிஷிகொரியிடமும் மூன்றாம் தர வீரர் பெடரர் குரோசியா வீரர் சிலிசிடமும் தோல்வி கண்டு வெளியேறினார்கள் .இறுதியாட்டத்தில் பெரிதும் அறிந்திராத புதிய வீரர்களான செலிசும் நிசிகொரியும் மோதுகிறார்கள் . மகளிர் போட்டியில் இறுதி ஆட்டத்தில் செர்னா வில்லியம்சும் வோச்நியாக்கியும் மோதுகிறார்கள்
மகளிர் இரட்டையர் ஆட்ட இறுதியாட்டத்தில் ஹிங்கிஸ்/ பெனிட்டா ஜோடி மகரோவ/ வேச்ணினா ஜோடியிடம் தோல்வி கண்டது
ஆலையடி வேம்பு உதயம் வி.க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி விநாயகபுரம் மின்னொளி சம்பியன்
ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக்கழகம் நடத்திய 20 வயதுக்குட்பட்ட 7 பேர் கொண்ட காற்பந்தாட்டப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி அணி சம்பியனானது.
இறுதியில் எங்கள் வழிக்கே வந்திருக்கிறது கூட்டமைப்பு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தமிழ்க் கூட்டமைப்புக்கு இப்போதைதுதான் ஞானம் பிறந்திருக்கிறது. நாங்கள் நீண்டகாலமாகச் சொல்லி வந்தவற்றை இப்போதுதான் சொல்கிறார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இதன்மூலம்
தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதியமைச் சராக பதவியேற்ற பிரபா கணேசன் தனது அமைச்சில் கடமை களைப் பொறுப்பேற்ற வேளை அவருக்கு இந்து வித்தியாகுரு பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்கள் பொன்னாடை போர்த்தி, தலைப்பாகை சூடி ஆசீர்வதித்தார். அமைச்சர் ரஞ்சித் சியம்ப லாபிட்டி, பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எச்.விக்கிரம சிங்கவும் அருகே காணப்படுகின்றனர்.
செங்கோட்டை: கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி: சாலை மறியலால் பதற்றம்: போக்குவரத்து பாதிப்பு
நெல்லை மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பழைய கட்டிடம் ஒன்று நகராட்சி அலுவலத்திற்கு அருகே உள்ளது.
வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100–ஐ தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் கன மழையால் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார்.
தமிழீழம் அமைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றது : கோத்தபாய ராஜபக்ச கடும் சீற்றம்
இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தனிநாடொன்றினை அமைப்பதற்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைவாக தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ள சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இந்த நோக்கத்தினை அடைவதற்கு வெளிநாடுகளின் ஆதரவினை திரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
இபோலா நோய்ப் பரவியதால் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியர்ரா லியோன், கிருமிப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக குறைந்தது மூன்று நாட்களுக்கு மக்களை (BBC)வீடுகளை வெளியில் வர விடாமல் தடுப்பது என அறிவித்துள்ளனர்.
சியர்ரா லியோனில் இபோலா எச்சரிக்கை விளம்பரம்
செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் மக்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.