புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014


இறுதி யுத்தத்தில் ஐ.நா. தவறிழைப்பு உயிரிழப்பை தடுக்க முன்வரவில்லை - ரொய்ட்டர்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களை பாதுகாக்க தவறியதன் மூலமாக ஐ.நா. தனக்கு வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்ற தவறியுள்ளதாக இலங்கையின் இரு அமைப்புகளின் புதிய அறிக்கையயான்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ் அறிக்கை பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதற்காக விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டுவதுடன் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு அவர்களே காரணம் எனத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மார்கா நிறுவகமும் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகளின் அமைப்புகள் நிகழவிருந்த பாரிய மனிதாபிமான துயரத்தை தடுத்து நிறுத்துவதற்கு சிறிய முயற்சியை கூட மேற்கொள்ளவில்லை, அவர்கள் ஆரம்ப கட்டங்களில் பிரச்சினையின் பாரதூரத்தை புரிந்துகொள்ள தவறி விட்டனர்.

விடுதலைப் புலிகளிடமிருந்து பொதுமக்களை பிரித்து அரசாங்க பகுதிக்கு அவர்களை நகர்த்துவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட தந்திரோபாயமொன்றை அவர்கள் உருவா க்கவில்லை என குறிப்பிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அறிக்கை பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதற்காக விடுதலைப்புலிகளை குற்றம்சாட்டுவதுடன் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு அவர் களே காரணம் என தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஐ.நா தவறிவிட்டது. அரசாங்க உத்தரவை தொடர்ந்து ஐ.நா வன்னியிலிருந்து வெளியேறியது கேள்விக்குரிய விடயம் என்றும் அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad