புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014

வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100–ஐ தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் கன மழையால் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார்.


காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல் வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஜீலம், தாவி உள்பட முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி வருகிறது. இந்த நதிகளின் கரையோரப் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கடந்த ஆண்டு உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் போல் காஷ்மீரில் சேதம் ஏற்பட்டுள்ளது. மலைப் பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஸ்ரீநகரின் ஒரு பகுதியிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் ஸ்ரீநகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குப்வாரா மாவட்டத்தில் பஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில் 50–க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

ரஜோரி மாவட்டத்தில் நிலச்சிவு ஏற்பட்டு மலை அடிவாரத்தில் இருந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 10 பேர் பலியானார்கள். மேலும் பலரை காணவில்லை.

ஜம்மு மாவட்டம் அக்னூர் பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு சிக்கி இருந்த 3 குழந்தைகள் உள்பட 14 பேரை விமானப்படை ஹெலிகாப்டர் மீட்டது.

வெள்ள மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. அவர்கள் தாழ்வான பகுதியில் சிக்கி இருந்தவர்களை மீட்டு வருகிறார்கள்.

முதல்வர் உமர் அப்துல்லா நேற்று வெள்ளச் சேத பகுதிகளை பார்வையிட்டார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று காஷ்மீர் சென்று வெள்ளச் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்.

வெள்ளச்சேதம் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100–ஐ தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad