![]() வீடு கட்டும் காணி அடையாளப்படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா நடத்த வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த வில்லை. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்கப்படவில்லை. இதில் எதுவும் செய்யாமல், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், பயனாளிகள் என்று சிலரை அழைத்து வெறும் காகிதத்தில் உங்களுக்குக் காணியும், வீடும், தருகிறோம் என எழுதிக்கொடுத்து அனுப்பி உள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். |
![]() |
| விடுதலையான பாலஸ்தீனியக் கைதிகளை பொறுப்பெடுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் |
ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக திங்கட்கிழமை விடுவிக்கப்படவிருந்த 1,966 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் பேருந்துகளில் ஏறிச் சென்றதாக, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இவர்களில், காசாவைச் சேர்ந்த 1,716 பேர் காசாவின் நாசர் மருத்துவமனையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.













