
ஸ்பெயின் ரேஸ் களத்தில் அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் கு

ஸ்பெயின் ரேஸ் களத்தில் அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் கு
![]() வீடு கட்டும் காணி அடையாளப்படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா நடத்த வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த வில்லை. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்கப்படவில்லை. இதில் எதுவும் செய்யாமல், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், பயனாளிகள் என்று சிலரை அழைத்து வெறும் காகிதத்தில் உங்களுக்குக் காணியும், வீடும், தருகிறோம் என எழுதிக்கொடுத்து அனுப்பி உள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். |

![]() தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''நான் சொல்வதை நிறையப் பேர் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ஏற்கனவே நான்கு கூட்டணிகள் அமைய வாய்ப்பு |
![]() |
| விடுதலையான பாலஸ்தீனியக் கைதிகளை பொறுப்பெடுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் |
இவர்களில், காசாவைச் சேர்ந்த 1,716 பேர் காசாவின் நாசர் மருத்துவமனையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
![]() ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு, தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் காணப்படுவதுடன் தற்போது உள்ள அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் அவர்களின் சுயலாபத்துக்காகவும் அரசாங்கத்தினுடைய ஆசிரியர் தொழிற்சங்கத்தின் நன்கிழுக்காகவும் செயல்பட்டு கொண்டு உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர் |
![]() வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி இன்று (13) காலையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர் |
![]() ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கைது வரும் நாட்களில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் இந்த அரசியல்வாதி கைது செய்யப்படுவார் என்பது அறியப்படுகிறது |
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு - கிழக்கில் களமிறங்கவுள்ள தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் பற்றி அவதானம் செலுத்தியுள்ளது.
குறிப்பாக வடக்கு முதல்வர் வேட்பாளரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ். வந்தபோது கூட இது சம்பந்தமாக இராமலிங்கம் சந்திரசேகரிடம் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கட்சியின் முன்னாள் எம். பி.க்கள் பலர், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாணசபை முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளனர் . இதுபற்றிக் கட்சித் தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.
கடந்த பொதுத்தேர்தலில் பெருமளவான எம்.பி.க்கள் தோற்கடிக்கப்பட்டதால் மாகாணசபைத் தேர்தலில் அதிகளவான முன்னாள் எம்.பி.க்கள் போட்டியிடக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது
![]() ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகளை கடுமையாக கண்டிப்பதாக வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாகப் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். |
![]() சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், ஐந்தாவது ஆய்வை நிறைவு செய்து நிதியை விடுவிக்க இலங்கை இரண்டு முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. அதாவது, ஐந்தாவது தவணையாக 347 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியைப் பெறுவதற்கு, அரசாங்கம் பின்வரும் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். |
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, 2025 ஒக்டோபர் முதல் 2027 செப்டம்பர் வரையிலான இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு நிதியளிக்க, 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை, அதாவது இலங்கை ரூபாயில் 1.1 பில்லியன்களை கோரியுள்ளது. |
![]() பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழல்கள், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் ஆகியவற்றின் பின்னணியில், இந்தத் தேர்தல்களை விரைவாக நடத்தி முடிப்பதற்கான நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. |
![]() உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய வான்வழி ஏவுகணை தாக்குதலில் தலைநகர் கீவ் மற்றும் எட்டுக்கும் மேற்பட்ட நகரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5,40,000 பொதுமக்கள் இந்த மின்தடை காரணமாக இருளில் மூழ்கியுள்ளனர். |