-
29 ஜன., 2013
சுமார் 2ஆயிரம் இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ளனர். இவர்களில் சிலர் சூரிச் விமான நிலையத்தில் உள்ள தடுப்பு முகாமில் ( சிறையில்) உள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். வாரத்திற்கு இரண்டு மூன்று பேர் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் விசா வழங்கி அனுப்பி வைக்கிறது.
இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாண தமிழர்களின் பொருளாதாரம் ஒரு காலத்தில் மணிஓடர் பொருளாதாரம் என சொல்வார்கள். கொழும்பிலும் வெளிமாவட்டங்களிலும் அரச உத்தியோகத்தர்களாக இருக்கும் தமது குடும்ப தலைவர்கள் மற்றும் பிள்ளைகள் அனுப்பும் மணிஓடரை நம்பி வாழும் நிலை காணப்பட்டது.
மாலி நாட்டு ஏர் போட் தீவிரவாதிகள் கைகளில் !மாலி நாட்டில் தரையிறங்கி உள்ள பிரான்ஸ் ராணுவம், தீவிரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த விமான நிலையம் ஒன்றை கைப்பற்றியுள்ளது.
காவோ நகருக்கு அருகேயிருந்த இந்த விமான நிலையத்தை முன்பு கைப்பற்றியிருந்த, அல்-காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்பினர், அதை தமது ராணுவ முகாமாக பயன்படுத்தி வந்தனர்.
மாலி நாட்டின் வட பகுதியில் உள்ள காவோ, கிடல், திம்புக்து ஆகிய மூன்று நகரங்களுமே, தீவிரவாத அமைப்பினரின் பலம்வாய்ந்த பகுதிகளாக உள்ளன. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள விமான நிலையம், காவோ நகருக்கு மிக அருகில் உள்ளது. எனவே, அடுத்த கட்டமாக பிரான்ஸ் ராணுவம், காலோ நகருக்குள் நுழைய முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது, இந்த விமான நிலையத்தில் இருந்து, காவோ நகரை நோக்கிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது, பிரான்ஸ் ராணுவம். பிரான்ஸ் ராணுவத்தின் 600 வீரர்கள் அடங்கிய மற்றொரு படைப்பிரிவு, திம்புக்து நகரை நோக்கி செல்கிறது என்றும் தெரியவருகிறது. அந்த நகரில் உள்ள அனைத்து வெளித் தொடர்புகளும் வெட்டப்பட்டுள்ளன. வீதிகளும் அடைக்கப்பட்டுள்ளன. செல்போன் டவர்கள், செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.

ராஜீவ் காந்தி கொலையில் சந்தேக நபராக் சுப்ரமணிய சுவாமி !
சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின்
விருந்துபசார வைபவம்
காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம் :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)
எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் . முடிந்தவரை நாம் தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில் எண்ணி நீங்களாகவே இந்த அழைப்பை ஏற்று கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்
முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.
தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்
தொடர்புகள்
இ.ரவீந்திரன் 079 218 70 75
சு.சண்முகநாதன் 044 451 80 22
நா.ஜெயக்குமார் (பாபு ) 031 862 18 03
28 ஜன., 2013
தந்தையின் விஸ்வரூப சர்ச்சையில் பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ருதிஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்தமகளான நடிகை ஸ்ருதிஹாசன் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இவர் லக் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படம் பெரியளவில் வெற்றியாகததால் தெலுங்கு பக்கம் கவனத்தை திருப்பினார்.
இவர் நடித்த அனகா ஓ தீரடு படம் பெரிய வரவேற்பை பெற்றதுடன் இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதும் பெற்றார்.
தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்காகவும் சிறந்த அறிமுக நடிகை விருது பெற்றார்.
தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக உள்ள இவர், இன்று தன் 27வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இன்று கமல்ஹாசனின் வாழ்க்கையிலும் முக்கியமான நாளாகும். விஸ்வரூபம் தடை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)