புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2012


 மாலை சுமார் 4.00 மணிக்கு லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் இருந்து, இரகசியமாக ஒரு தனியார் விமானம் சுமார் 150 ஈழத் தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு இந்த தனியார் விமானம் கொழும்பு செல்லவுள்ளது.
இன்று மாலை சுமார் 4.00 மணிக்கு லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் இருந்து, இரகசியமாக ஒரு தனியார் விமானம் புறப்பட ஏற்பாடாகியுள்ளது  சுமார் 150 ஈழத் தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு இந்த தனியார் விமானம் கொழும்பு செல்லவுள்ளது. பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள், மற்றும் அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட பலர் இவ்வாறு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இவர்களை தற்போது லண்டன் பொரம்-வூட் என்னும் பகுதியில் உள்ள தடுப்பு நிலையம் ஒன்றில் தடுத்துவைத்திருக்கிறார்கள், பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள்.இவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய, தாம் அணுகிய சட்ட வல்லுனர்கள் தம்மைக் காப்பாற்றவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள். குறைந்தது தாம் 1 மாதகாலமாக சிறையில் இருப்பதாகவும், பெருந்தொகைப் பணத்தை சட்டவல்லுனர்களும் , சொலிசிட்டர்களும் தம்மிடம் அறவிட்டார்களே தவிர, தம்மைக் காப்பாற்ற முனையவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்று மாலை 4.00 மணிக்கு விமானம் புறப்படவுள்ள நிலையில், தற்போது தமது சட்டவல்லுனர்களுக்கு இல்லையேல் சொலிசிட்டர்களுக்கு தொலைபேசி அழைப்பை விடுத்தால், அவர்கள் கதைக்க தயாராக இல்லை என்றும், வேண்டும் என்றே தமது அழைப்பை ஏற்க்க மறுப்பதாகவும், நாடுகடத்தபடவுள்ள தமிழர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்கள்.
   

ad

ad