சனி, மார்ச் 29, 2014

விஜ்யகாந்த் குடிகாரன் என்று சொல்லாமல் சொல்லும் சிதம்பரம் யாருடைய பேச்சோ... விடிஞ்சா போச்சு என்று கூறுவார்கள்: அதன்படி தான் விஜயகாந்த் பேச்சும்: 
சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
பா.ஜனதா கட்சி என்பது இந்து மத வெறியும், இந்தி மொழி வெறியும் உடையது. அந்த கட்சியுடன் தமிழகத்தில் 3 கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. அது எப்படி என்பது தெரியவில்லை. அந்த கட்சிகள் மொழி மற்றும் மத வெறிக்கொள்கைகளை எதிர்ப்பவை. ஆனால்
இந்த கூட்டணி எதன் அடிப்படையில் உருவானது என்று நினைக்கும்போது வெட்கக்கேடாக உள்ளது. பா.ஜ.க. குஜராத் மாநிலத்தில் 3 சட்டசபை தேர்தல்களை மோடி தலைமையில் சந்தித்தது. அப்போதெல்லாம் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவரைக்கூட அவர்கள் கட்சியில் இருந்து போட்டியிட அனுமதிக்கவில்லை.

பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை எங்கள் அரசுதான் கொண்டு வந்தது. ஆனால் அதனை நரேந்திர மோடியும், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும்தான் எதிர்த்தார்கள். ஆனால் இப்போது மோடிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து 4 தீவிரவாதிகளை கைது செய்துள்ளது. 
சென்னை அருகே நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த், ஊழலின் மொத்த உருவம் ப.சிதம்பரம் என்று கூறியுள்ளார். யாருடைய பேச்சோ... விடிஞ்சா போச்சு என்று கூறுவார்கள். அதன்படி அவரது இந்த பேச்சும் அப்படித்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.