புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014

கனரக வாகனங்கள் சிறு வீதிகளை பயன்படுத்த யாழில் தடை ; பொலிஸ் 
யாழ்.குடாநாட்டின் சிறு வீதிகளின் ஊடாக கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட விரைவில் தடை விதிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவுள்ளது.

 
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன இதனை தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில் :-
 
அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துச் செல்கின்றது இதனால் உயிர் இழப்புக்களும் ஏற்படுகின்றன. இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாரினால் விசேட வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளன. 
 
குறிப்பாக புத்தூர் நவக்கிரியில் வியாழக்கிழமை 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் மகேஸ்வரி நிதியத்துக்குச் சொந்தமான டிப்பரால் மோதிக் கொல்லப்பட்டார். 
 
சம்பவம் நடந்த வீதியில் குறித்த டிப்பர் வாகனம் செல்ல முடியாதவாறு நிலத்தின் தன்மை, அகலம் காணப்பட்டபோதும் டிப்பர் வாகனம் பயணித்துள்ளது. இவ் வீதி உட்பட யாழ். குடாநாட்டில் உள்ள சிறு வீதிகளில் செல்லக்கூடிய அல்லது செல்ல அனுமதிக்கக்கூடியதான நிலத்தின் தாங்குதிறன், வீதியின் அகலம் என்பனவற்றைக் குறிப்பிட்டுப் பாரவூர்திகள் செல்ல அனுமதிக்கப்படும் வகைகள் தொடர்பில் அறிவித்தல் பலகை போடப்பட்டிருக்கவில்லை. 
 
அந்த அறிவித்தல் வீதியில் போடப்பட்டிருந்தால் அவ்வாறான விபத்துகளைத் தடுக்க முடியும் என்று கூறப்பட்டது. 
 
இதனடிப்படையிலேயே சிறு வீதிகள் மற்றும் ஒழுங்ககைள் ஊடாக கனரக வாகனங்கள் பயணிப்பது தடைசெய்யப்படவுள்ளது. இதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து இது குறித்த எச்சரிக்கைப் பலகைகள் உரிய வீதிகளில் நடப்படவுள்ளதாக தெரிவித்தார்

ad

ad