புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014


இலங்கை கடலில் காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணி 4வது நாளாகவும் தொடர்கிறது
இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகில் தமது விசைப்படகு மூழ்கியநிலையில் நடுக்கடலில் காணாமல் போயுள்ள மூன்று தமிழக மீனவர்களையும் தேடும் பணிகள் நான்காவது நாளாக இடம்பெற்று வருகின்றன.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற நான்கு பேரே காணாமல் போயுள்ளனர்.
இந்த விசைப்படகில் ஜோன்கென்னடி (50) டேனியல் (20) வில்சன் (19) எஸ்ரோன் (19) ஆகிய நான்கு மீனவர்கள் சம்பவத்தின்போது இருந்துள்ளனர்.
எனினும் ஜோன் கென்னடி என்பவர் உள்ளுர் மீனவர்களால் மீட்கப்பட்டார். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் ஜோன் கென்னடி என்ற மீனவரை மீட்புக்குழு மீனவர்கள் மீட்டு பாம்பனுக்கு கொண்டு வந்தனர்.
ஏனைய மூன்று மீனவர்களை தேடும் பணியில் 30 மீனவர்கள் அடங்கிய மீட்பு குழு மூன்று படகுகளில் நான்காவது நாளாகவும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை மீட்பு நடவடிக்கைகளில் கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மீட்பு பணிகளில் ஈடுபடவில்லை என்பதை கண்டித்து கடந்த புதன்கிழமை பாம்பன் பாலம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்படையின் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டிருந்தால் மூன்று மீனவர்களையும் காப்பாற்றி இருக்க முடியும்.
இந்தநிலையில் காணாமல் போயுள்ள மூன்று மீனவர்களுக்கும் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு என்று மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

ad

ad