புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014


அளுத்கம வன்முறை! பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கு அச்சுறுத்தல்!- உயிர் பாதுகாப்பிற்காக இங்கிலாந்தில் தஞ்சம்
அளுத்கம வன்முறைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 13 பேரையும் விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைப் புறக்கணித்ததற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது அப்பிரதேசத்துக்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வீ. இந்திரன் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிராக நடாத்தப்படவிருந்த ஒழுக்காற்று விசாரணையும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இவர் இம்மாதம் முதல் பகுதியில் களுத்தறை மாவட்டத்திலிருந்து பொலிஸ் சமூக நலப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதேவேளை, இவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வேறு ஒரு விசாரணைக்கு, ஏற்கனவே, இவரினால் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்பட்ட பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கருத்துத் தெரிவிக்கையில்,
அளுத்கம சம்பவத்துக்கும் தற்பொழுது அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென தெரிவித்துள்ளார்.
உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரன்
களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் வீ. இந்திரன் உயிர் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகள், தனிநபர்கள், பொலிஸ் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் காரணமாகவே அவர் இவ்வாறு தற்காலிகமாக வெளிநாடு சென்றுள்ளதாக பேசப்படுகிறது.
அளுத்கம, தர்கா நகர் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஏற்பட்ட இனவாத வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 பேரை விடுதலை செய்யவில்லை என்பதால், இந்திரன், அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல்வாதகிள், பல்வேறு சிங்கள அடிப்படைவாத அமைப்புகள் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன.
இதனையடுத்து இந்திரனை இடமாற்றிய பொலிஸ் திணைக்களம் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களுக்கு பொறுப்பாக வேறு பிரதிப் பொலிஸ் மா அதிபரை நியமித்தது.
தொடர்ந்தும் கொடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் காரணமாக உரிய முறையில் கடமையாற்ற முடியாத காரணத்தினால், இந்திரன் விடுமுறை பெற்று இங்கிலாந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ad

ad