புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014


லண்டன் பொருளியல் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் கைது
லண்டன் பொருளியல் கல்லூரியில் சர்வதேச அபிவிருத்தி மற்றும் அவசர மனிதாபிமான நலன்புரி பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளராக பணியாற்றும் கலாநிதி ராஜேஷ்
வேணுகோபால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், நேற்று முன்தினம் முற்பகல் 11.35 அளவில் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டமை தொடர்பாக எந்த விளக்கங்களையும் தெரிவிக்காத பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று இரவு 7 மணி வரை அவரிடம் விரிவாக விசாரணை நடத்தியுள்ளனர்
இதனையடுத்து கலாநிதி வேணுகோபால் மிரிஹானவில் உள்ள குடிவரவு, குடியகல்வு முகாமுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மிரிஹான முகாமுக்கு சென்று அவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பணிப்பாளர் கலாநிதி வேணுகோபாலிடம் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கலாநிதி ராஜேஷ் வேணுகோபால், இலங்கையில் மேற்கொள்ளும் ஆய்வுகள், அவரது மேற்பார்வையில் இடம்பெறும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
லண்டன் பொருளியல் கல்லூரியின் சர்வதேச அபிவிருத்தி பிரிவும் இந்திய அரசாங்கமும் அவரது கைது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளன.
இந்த நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad