புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2015

"மோடியின் இரண்டு முகங்கள்"- ஜே. ஜேம்ஸ்ராஜ்



26.10.2014 அன்று மிகப்பெரிய மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கூடிய கூட்டத்தில் நமது பிரதமர் அவர்கள் இரண்டு செய்திகளைக் கூறியுள்ளார்.

1. மகாபாரத்தில் கர்ணன் தனது தாய் வயிற்றில் பிறக்கவில்லை. அந்தக் காலத்திலேயே பிறப்பு மூலத்துக்குரிய விஞ்ஞானம் (genetic science) நமது நாட்டில் இருந்திருக்கிறன்றது. இந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையில்தான் அவர் பிறப்பிக்கப்பட்டார் என்று கூறி இருக்கிறார்.

2. நாம் கடவுள் "கணேஷா"வை வழிபடுகின்றோம். அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். அதுவும் யானையின் தலைலை மனித உடலுடன் பொறுத்துகின்ற அளவிற்கு திறமையுள்ள நிபுணர்கள் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

இந்த சொற்பொழிவை திரு. கரன் தாப்பார் (Mr.KARAN THAPAR) என்கிற ஊடக அறிஞர், நவம்பர் 1ம் தேதி இந்து பத்திரிக்கையில் "திரு. மோடியின் இரண்டு முகங்கள்" என்ற தலைப்பில் வெகுவாக சாடி இருக்கிறார்.

பகுத்தறிவிற்கு ஒவ்வாத புராணக் கதைகளை இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமர் பேசக் கூடாது என்பது அவரது வாதம். அறிவாளிகளும், விஞ்ஞானிகளும் இதை எதிர்த்து ஏன் குரல் கொடுக்கவில்லை என கேள்வி கேட்டுள்ளார். ஊடகங்கள் இதை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து விட்டன என்று குற்றம் சாட்டுகிறார். இந்தக் கட்டுரைத் தொடர்பாக 13 வாசகர்கள் கடிதங்கள் எழுதியுள்ளனர். மீண்டும் 7/11 அன்று திரு.விக்ரம் சோனி (Mr.VIKRAM SONI) அவர்களும், திருமதி ரோமிலா தர்பார்  (Ms. ROMILA THAPAR) அவர்களும் சேர்ந்து ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். அதற்கும் 3 வாசகர்கள் கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். 8/11 அன்று "டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிக்கையில் சிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் இருக்கிற பேராசிரியர் திரு.திபங்கர் குப்தா (Mr.DIPANKAR GUPTA) அவர்கள் இதுகுறித்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். மறுபடியும் 13/11 அன்று இந்து பத்திரிக்கையில் விஞ்ஞானி திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். எழுதியவர்களில் எவருமே விஞ்ஞான அடிப்படையிலும், வரலாற்று அடிப்படையிலும் இதை அலசி எழுதவில்லை.

நமது "பகுத்தறிவுப் பாசறை" அறிஞர்களும், தமிழ் பேராசியர்களும் இதுவரை அமைதி காத்து வருவதைப் பார்த்தால் தமிழகம் மிகவும் இருண்ட காலத்தில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகின்றது. (இருண்ட காலத்தில் இருக்கிறது என்பதே உண்மை).

பேராசிரியர்  திரு. தீபங்கள் குப்தா அவர்கள், எகிப்தில் உள்ள "ஐசிஸ்" (ISIS) என்ற பெண் தெய்வத்திற்கு பசுமாட்டுத்தலை இருப்பதுபோன்று, இங்கு "கணேஷா"விற்கு யானைத்தலை இருக்கிறது என இரண்டையும் ஒப்பிடுகிறார். "ஐசிஸ்" என்கிற பெண் தெய்வம் வேறு. பசுவின் தலையை உடைய பெண் தெய்வம் வேறு. பசுவைப் போல சாந்தமும், பொறுமையும் உள்ள பெண் தெய்வம் என்ற அடிப்படையில் தான் இந்த பெண் தெய்வத்திற்கு இந்த உருவம் பழங்கால எகிப்தியர்களால் கொடுக்கப்பட்டது. "ஐசிஸ்" என்கிற பெண் தெய்வத்திற்கு வேறு இரண்டு விதமான உருவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் "கணேசா" என்கிற நமது கடவுளுக்கு யானைத் தலை கொடுக்கப்பட்டிருப்பது சமய வரலாற்றில் (Religious History) வருவது. பிளாஸ்டிக் சர்ஜரியில் வருவது அல்ல. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் குஷானர்கள் காலத்தில் துவக்கப்பட்டு, குப்தார்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டு, சானக்கியர்கள் காலத்தில் பாரதநாடு முழுவதும் பரவியதுதான் கணேஷ வழிபாடு. துவக்க காலத்தில் இரவில் "பிள்ளையார் வழிபாடு" செய்து விடியுமுன் கிணற்றில் போடும் வழக்கத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை வினாயகரை வழிபாடு செய்துவிட்டு, பின் நீர் நிலைகளில் கரைப்பதை இன்றும் பின்பற்றி வருகிறோம். "வினாயக சதுர்த்தி" என்றுதான் கொண்டாடுகிறோமே தவிர "வினாயக ஜெயந்தி" என்று கொண்டாடுவது இல்லை. இதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

"Genetic science" என்பது விஞ்ஞான பூர்வமாகவும், வரலாற்று அடிப்படையிலும் நிரூபிக்கப்பட்ட ஒன்று. வரலாற்றில் இது மிகவும் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பரிணாம வளர்ச்சியில் (Evolution) இரண்டு கைகள், இரண்டு கால்களுடன், நிமிர்ந்து நடந்த ஒரு மிருகம் (HOMO ERECTUS) ஆதி மனிதனாக (HOMO SAPIENS) எவ்வாறு மாற்றப்பட்டது என்பது எழுதப்பட்டிருக்கிறது. முதலில் 48 குரோமோசோமாக (chromosome) இருந்த மிருகம், 46 குரோமேஇசோமாக குறைக்கப்பட்டு மனிதனாக மாற்றப்பட்டான் என்பதுதான் வரலாறு. பிறகு அந்த மனிதன் படிப்படியாக நியாண்டாதால் (Neanderthal) க்ரோ மாக்னான் (cro-magnon) என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டு பின் இன்று உள்ள நிலைக்கு எவ்வாறு உருமாற்றப்பட்டான் என்பது எழுதப்பட்டிருக்கிற வரலாறு. 

இன்றைய விஞ்ஞானிகள் இவைகளை ஆய்வு செய்து, இவை அனைத்தும் உண்மையே என நிரூபித்து உள்ளனர். இதுமட்டுமல்ல முதல உருமாற்றம் பூமத்திய ரேகை பகுதியில், எத்தியோப்பியாவிலும், இந்தோனேசியாவிலும் நடந்திருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். நமது குமரிக்கண்டம் கடலில் மூழ்கிவிட்டதால மூன்றாவது இடமாகிய குமரிக்கண்டத்தில் ஆய்வு செய்து நிரூபிக்க இயலவில்லை. யூதர்களின் வரலாற்றில் குமரிக் கண்டத்தைப் பற்றிய குறிப்பாக சிறிய பகுதியாக இது வருவதை மட்டுமே நம்மாமல் பார்க்க முடிகிறது. இதுதான் நமது கோளில் (planet earth) நடந்த திரு.மோடி அவர்கள் கூறிய "Genetic science"ன் வரலாறு. 

மனித இனத்தோற்றம், வரலாறு இவைகள் முழுமையாகத் தெரிய வேண்டுமென்றால் History channel என்கிற தொலைக்காட்சியில் "Ancient aliens" என்று வருகின்ற தொடர்களை பாருங்கள். இதை இணையதளத்திலும் பார்க்கலாம். 30க்கு மேலே உட்தொடராக (Episode) இது உள்ளது. இவைகளை அனேகர் பார்த்துக்கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால் புரியாமல் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். இவைகள் புரிய வேண்டுமென்றால் "திரு.Zecharia Sitchin" அவர்களுடைய இணைய தளத்தைப் பாருங்கள். அவர் எழுதி இருக்கிற புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். 

  1. The 12th Planet  2. The Stairway to Heaven  3. The Wars of Gods and Men  4. The Lost Realms  5. When Time Began  6. The Cosmic Code  7. The Divine Encounters  8. Genesis Revisited
  9. The End of days
10. The Last Book of Enki
11. The earth chronicles expeditions 


இதைத்தவிர 10 குறுந்தகடுகளும் வெளியிட்டிருக்கிறார். அனைத்து உண்மை வரலாறும் உங்களுக்குத் தெளிவாக விளங்கும். சிறிய ஐயங்கள் தோன்றினால் என்னைத் தொடர்பு கொண்டு உங்கள் வினாக்களைக் கேளுங்கள். விடைகள் கிடைக்கும். 

தமிழர்களைப் பொறுத்தவரை, குமரிக்கண்ட வரலாறு துவங்கி இன்று வரை மட்டுமல்ல, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதும் இவைகளில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. 

எனது அடுத்த கட்டுரையில் மலேசிய விமானம் எம்.எச். 370ன் மறைவு, அது மாயமான வரலாறு இவைகள் குறித்த உண்மை என்ன என்பது விளக்கப்படும்.
"History became legend
legend became myth"

வரலாற்று அடிப்படை இல்லாமல் எந்த புராணமும் இல்லை.

எல்லா தமிழர்களும் தெரிந்துகொள்ளுகிற வகையில் தமிழன் என்ற உணர்வு உள்ளவர்கள் உங்கள் Face book, Twitter, whatsapp இவைகளில் இந்த கட்டுரையை பதிவு செய்யுங்கள். கேள்விகள் பெருகினால்மட்டுமே விடைகள் விரிவடையும். 

ad

ad