புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2012


சதாமின் 1000 மில்லியன் டாலரை அடித்த நபர் யார் ?
அமெரிக்க படைகள் ஈராக்கை கைப்பற்றிய வேளை, சதாம் தலைமறைவானர். பல மாதங்களுக்குப் பின்னர் அவர் ஒரு பதுங்கு குழியினுள் இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது. சதாம் எங்கே பதுங்கியிருக்கிறார் என்று தெரிவித்தால் 10 மில்லியன் டாலர்கள் பரிசாகக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இப் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒருவர் சதாம் பதுங்கியிருந்த இடத்தைக் காட்டிக்கொடுத்தார். அமெரிக்க படைகளும் அவரைக் கைதுசெய்தது. ஆனால் காட்டிக் கொடுத்த நபருக்கு அந்த 10 மில்லியன் டாலர்கள் கிடைக்கவில்லை. ஏன் தெரியுமா ? அவர் உயிரோடு இல்லை. யாரோ அவரைச் சுட்டுவிட்டார்கள் என்கிறது சி.ஐ.ஏ. அது ஒருபுறம் இருக்க சதாமை பிடித்த பங்கர்(பதுங்கு குழியில்) இருந்து சில ஆவணங்கள் எடுக்கப்பட்டது.


அதில் சிரியாவில் உள்ள வங்கி ஒன்றில் சதாமுக்குச் சொந்தமான கணக்கு ஒன்றில், சுமார் 1100 மில்லியன் டாலர் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சி.ஐ.ஏ கைப்பற்ற இரகசியமாக பல முடற்சிகளை மேற்கொண்டது, ஆனால் சி.ஐ.ஏ வுக்கு ஆப்புவைத்த ஒரு நபர், இந்த முழுப்பணத்தையும் வங்கியில் இருந்து எடுத்துவிட்டார்.... சரி வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !



சதாமின் பதுங்கு குழியில் இருந்து சி.ஐ.ஏ. எடுத்து டீகோட் செய்த காகிதங்களில் இருந்து, அந்த வெளிநாட்டு நபர்களில், ஒரு சிலரின் பெயர்கள் தெரியவந்தது. ஆனால் அவை நிஜமான பெயர்களா என்று தெரியாது. போலிப் பெயரில் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின் நிஜப் பெயராகவும் இருக்கலாம்: நிஜப் பெயரில் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின் போலிப் பெயராகவும் இருக்கலாம். இந்த ஆவணங்கள் தவிர வேறு ஒரு காகிதமும் சதாம் பதுங்கு குழியிலிருந்து கிடைத்தது. அது Bank Withdrawal Slip! – வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான வெற்று பாரம், சதாமின் கையெழுத்துடன்.

சதாமின் கையெழுத்து போடப்பட்டிருந்தது பேனாவால் அல்ல – ஒரு பென்சிலால் ! Withdrawal Slipக்கு உரிய வங்கி, சிரியா நாட்டில் இயங்கிவந்த வங்கி ! உடனே இந்த பேங்கில் ஒரு கண் வைத்தது, சி.ஐ.ஏ. குறிப்பிட்ட பேங்குக்கு அமெரிக்காவில் ஆபரேஷன் கிடையாது. ஆனால், லண்டன் உட்பட வேறு ஐரோப்பிய நகரங்களில் கிளைகள் இருந்தன. அவற்றுக்குள் தமது ஆட்களை ஊடுருவ செய்தது சி.ஐ.ஏ. இதன் பின், சதாமின் பதுங்கு குழிலில் இருந்து சில காகிதங்கள் கிடைத்தன. அதில் CODE WORD பேங்க் ஆவணங்களும் இருந்தன. அவற்றை டீ-கோட் செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன (நிஜத்தில் டீ-கோட் பண்ணி முடித்திருந்தார்கள்) என்ற விபரத்தை மறைமுகமாக லீக் செய்தது, சி.ஐ.ஏ.

பாரிஸில் இருந்து வெளியான பத்திரிகை ஒன்றில் புலனாய்வு கட்டுரையில்தான் இந்த தகவல் லீக் செய்யப்பட்டது. அந்த கட்டுரையை எழுதிய நபர், சி.ஐ.ஏ.வுடன் தொடர்புடைய ஆள் என்பது, மீடியா சர்க்கிளில் தெரியும். பிரான்ஸில் பிறந்த இரண்டாவது தலைமுறை அல்ஜீரியர் அவர். பெயர் வேண்டாம். சதாமின் பதுங்கு குழிலில் இருந்து சில பேங்க் ஆவணங்களும் இருந்தன என்ற கதையை சி.ஐ.ஏ. லீக் செய்த காரணமே ஒரு தந்திரம்தான்! அதாவது, சி.ஐ.ஏ.வுக்கு பேங்க் விஷயம் உள்ள காகிதங்கள் கிடைத்துள்ளன. அவர்கள் டீ-கோட் செய்து, பணத்தை தேடி வருவார்கள் என்று சதாமின் பணத்தை நிர்வாகிக்கும் வெளிநாட்டு ஆட்கள் நினைத்தால், பணத்தை அந்த கணக்கில் இருந்து எடுத்து வேறு இடத்திற்கு மாற்ற முயல்வார்கள்.

அப்போது சி.ஐ.ஏ.வின் உளவு வலைப்பின்னல் மூலம் பணத்தையும், நிர்வாகிக்கும் ஆட்களையும் பிடித்து விடலாம். நல்ல திட்டம்! அது வேலை செய்யவும் செய்தது!!

இந்த தகவல் லீக் ஆகி சில தினங்களின் பின்னர், National Bank of SYRIA, டாமாஸ்கஸ் நகர மெயின் பிராஞ்ச்சுக்கு நாகரீக உடையணிந்த ஒருவர் ஆடம்பரக் காரில் வந்திறங்கினார். அவரது கையில் ஒரு Bank Withdrawal Slipம், ஒரு பவரும் இருந்தது. இரண்டிலும் இந்த கையொப்பம் சதாமின் கையொப்பம் – பென்சிலால் போடப்பட்ட கையொப்பம்! சிலிப்பில் எழுதப்பட்டிருந்த தொகை 1100 மில்லியன் டாலர். அந்த பேங்கில் இருந்த குறிப்பிட்ட அந்த USD கணக்கில் அவ்வளவு பணமும் இருந்தது. National Bank of SYRIAவில் சி.ஐ.ஏ. ஊடுருவ விட்ட அதிகாரி, சிரியாவில் இருந்த அமெரிக்க தூதரகத்துக்கு (இப்போது இல்லை) விஷயத்தை சொல்ல, அங்கே தயாராக இருந்த சி.ஐ.ஏ. ஆட்கள் உடனே வங்கிக்கு வந்து சேர, இந்த சந்தடியில், காசு எடுக்க வந்த நபர் இவர்களிடம் அகப்படாமல் மாயமாக மறைந்து போனார்!

இது நடந்து அடுத்த வாரமே அமெரிக்கா, சிரியா வங்கிக்கு ஒரு கடிதம் அனுப்பியது. சதாமின் கணக்கிலுள்ள பணத்தை தங்களிடம் ஒப்படைத்து விடும்படியும் அதை ஈராக்கின் அபிவிருத்தி வேலைகளில் உபயோகிக்கப் போவதாகவும் கடிதம் தெரிவித்தது. அதற்கு National Bank of SYRIA தவறாமல் பதிலும் போட்டது. அந்தப்பதில் – “சதாம் அகப்பட்டு உங்களது (அமெரிக்காவின்) காவலில் இருப்பதால், அமெரிக்க அரசின் பெயரில் ஒரு power of attorneyயில் சதாமின் கையொப்பத்தை வாங்கி வாருங்கள்; பேஷாக காசு தருகிறோம்” விடுவார்களா அமெரிக்கர்கள்? அதையும், செய்தார்கள். ஆனால், இதில் சில சிக்கலான நிர்வாக வேலைகள் இருந்தன. அதையெல்லாம் முடித்து, சதாமின் கையொப்பத்துடன் பவர் தயாரித்து, சிரியாவில் இருந்த அமெரிக்க தூதரகம் பேங்கை தொடர்பு கொள்ள, பேங்க் சொன்ன பதில், “அடாடா… மற்றொருவர் பவருடன் வந்து பணத்தை கொண்டு போய்விட்டாரே! இப்போது அந்த கணக்கில் சுமார் 2000 டாலர்கள் மட்டுமே உள்ளது. அது வேண்டுமானால், தருகிறோம்”

சி.ஐ.ஏ.க்கு N-14 காதில் பூ வைத்த கதை இது ! பேங்கில் இருந்த சி.ஐ.ஏ.வின் ஆளுக்கும் தெரியாமல், பணம் பறந்து விட்டிருந்தது. சிரியா அரசின் உதவி இல்லாமல், இது நடந்திருக்க சாத்தியமில்லை.

இப்போது சொல்லுங்கள், சிரியா மீது அமெரிக்காவுக்கு கோபம் இருக்குமா? இருக்காதா ?

ad

ad