புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2012


நடிகர் அஜீத்துக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக செய்திகள் பரவி உள்ளன.

அஜீத் கார் பந்தய வீரர் ஆவார். போட்டிகளில் அவர் பங்கேற்ற போது சிறு சிறு விபத்துகளில் சிக்கினார். இதனால் முதுகில் காயங்கள் ஏற்பட்டன. இதற்கு சிகிச்சை பெற் றும் கொண்டார்.

தற்போது விஷ்ணு வர்த்தன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

இப்படத்தின் சண்டைக் காட்சியொன்றில் நடித்தபோது விபத்து ஏற்பட்டது. உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. முதுகிலும் பாதிப்பு ஏற்பட்டது.

உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்ப அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி டாக்டர்கள் ஆலோசனை கூறியதாகவும் அதனை ஏற்று சிவா இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு முன்னால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அஜீத் தரப்பில் இதனை மறுத்தனர். அவருக்கு நெருக்கமானவர்கள் இதுகுறித்து கூறும்போது அஜீத் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் முடிவில் இல்லை. தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகே அறுவை சிகிச்சை செய்து கொள்வார் என்றனர்.

ad

ad