புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2012



 
ஈ.பி.டிபியின் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக வடமராட்சி கிழக்கு மக்கள் ஆர்ப்பாட்டம்!
சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவதாகத் தெரிவித்து ஈ.பி.டிபியின் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக வடமராட்சி கிழக்கு மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அம்பனில் உள்ள மணல் மாற்றும் இடத்தில் ஒன்று கூடிய பொதுமக்களும் உழவு இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினரும், தொழிலாளர்களும் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணிவரையில் இப்போராட்டம் நடைபெற்றது. இதன் போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த மகேஸ்வரி நிதியத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றபோதும் போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை.
மேலும் வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மண் அகழ்வுகளை மகேஸ்வரி நிதியம் நிறுத்துவதோடு, தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பள நிலுவைகளையும் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ad

ad