புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2012


பாலஸ்தீனத்தைப் போன்று தமிழ் ஈழத்தையும் ஐ.நா. ஒரு நாள் அங்கீகரிக்கும்: வைகோ
பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. மன்றத்தில் தனிநாடு என்ற அங்கீகாரம் கிடைத்துவிட்டது. அதுபோலவே, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தையும் ஐ.நா. மன்றம் அங்கீகரிக்கும் ஒரு நாள் வரத்தான் போகிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ் ஈழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு, 1989-ம் ஆண்டு முதல் நவம்பர் 27-ம் தேதியன்று தமிழ் ஈழத்திலும் தரணி எங்கும் வீர வணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, இலங்கையில், தமிழர் தாயகத்தில், மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ- மாணவியர்களை, சிங்கள இராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பலர் காயமுற்றனர். பல்கலைக்கழக மாணவ-மாணவியர் தாக்கப்பட்டதற்கு இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
நேற்றைய தினம் பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. மன்றத்தில் பெருவாரியான ஆதரவோடு, தனிநாடு என்ற அங்கீகாரம் கிடைத்துவிட்டது.
அதுபோலவே, சுதந்திரத் தமிழ் ஈழ தேசமும் விரைவில் அமைந்து, அதை ஐ.நா. மன்றம் அங்கீகரிக்கும் ஒரு நாளும் வரத்தான் போகிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad