8 ஜூலை, 2013

,

தேர்தலுக்கு முன்னரே 13வது சட்டப் பிரிவில் திருத்தம்: செய்தியாளர்களிடம் பசில் ராஜபக்ச
இலங்கையில், வடமாகாண தேர்தலுக்கு முன்னரே, 13 வது சட்டப்பிரிவில் புதிய திருத்தம் கொண்டு வரும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மசோதா கொண்டு வர முடிவு செய்துவிட்டால், இலங்கை அரசு அதில் சமரசம் செய்து கொள்வதில்லை என்று பசில் கூறியுள்ளார்.
மக்கள் விரும்பினால் மட்டுமே அந்த முடிவில் இருந்து பின்வாங்குவோம் என்றும் அவர் குறிப்பி்ட்டுள்ளார்.
13வது சட்டத்திருத்தத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கு முன்பு அதுகுறித்து இந்தியாவுடன் கலந்தாலோசிக்கப்படுமா என்கிற கேள்விக்கு பசில் ராஜபக்ச பதிலளிக்கவில்லை.
சில விசயங்கள், கணவன் - மனைவி இடையிலான இரகசியம் போன்று காக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச தனது இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய பின்னர் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.