8 ஜூலை, 2013

,

லண்டன் கொஸ்கோ தமிழன் கொலைச் சம்பவம்! குற்றவாளியை அடையாளப்படுத்தினால் £50 000 சன்மானம்!
லண்டனில் வட்ஃபேட் பகுதியில் பிரபலமான கொள்வனவுச் சந்தையான கொஸ்கோ வாகனத் தரிப்பிடத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கடந்த மே மாதம் 26ம் திகதி தாக்குண்ட நிலையில் கிடந்துள்ளார்.
34 வயதுடைய பிரசன்னா அருள்செல்வம் எனும் இளம் தந்தை தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக லண்டன் புனித.மேரிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தினர் பிரன்னாவின் உடலிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் இத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கு சாட்சியாளர்களின் உதவியினையும் கோரியுள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியைக் காட்டிக்கொடுத்தால் 50 000 பிரித்தானிய பவுண்ட்ஸ் ரொக்க சன்மானம் வழங்கப்படும் என பிரித்தானிய குற்றத் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மேற்படி தாக்குதல் தொடர்பில் குற்றவாளியை அடையாளம் காட்டுவோர் தயவுசெய்து 0800 555 111  என்னும் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு அவ்வாறு தொடர்பினை மேற்கொள்வோரின் விபரங்கள் இரகசியமாக பேணப்படும் எனவும் பிரித்தானிய குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.