புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2014

வேலைக்காரருக்கு ரூ.600 கோடி சொத்தை கொடுத்த காங்கிரஸ் தலைவர்

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது வீட்டு வேலையாள் பெயரில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ராஜ்காட்டில் வசித்து வந்தவர் கஜ்ராஜ் சிங் சடேஜா. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவரது வீட்டில் வேலை செய்து வந்தவர் வினுபாய் கஞ்சிபாய்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் காலமானார் கஜ்ராஜ் சிங். இவர் தனது மரணத்திற்கு முன்னர் தனது விசுவாசியான வினுபாய் பெயரில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, பணம் உள்ளிட்ட சொத்தை எழுதி வைத்துள்ளார்.
சமீபத்தில் வினுபாயை அவரது குடும்பத்தாருடன் கஜ்ராஜின் உறவினர்கள் கடத்தியுள்ளனர். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் அவர்களை பொலிசார் மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடத்தலின் பின்னணி குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், கஜ்ராஜ் தனது உயிலில் தனது உறவினர்களைப் புறக்கணித்து, வினுபாய்க்கு சொத்துக்களை எழுதி வைத்தது தெரியவந்துள்ளது.
மேலும் கஜ்ராஜ் அளித்துள்ள பணத்தின் மூலம், எதிர்காலத்தில் தனது குழந்தைகளைக் கல்வி கற்க இங்கிலாந்து அனுப்ப வினுபாய் திட்டமிட்டுள்ளார்.

ad

ad