புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2014

ஏப்ரல் மாதத்தில் யாழிற்கு புகையிரத சேவை; இந்திய துணைத்தூதுவர் 
வடக்கின் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி இன்று காலை 10 மணியளவில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இக் கண்காட்சியில் யாழிலிருந்து 30 உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும்
மற்றும் வெளியிலிருந்து 180 நிறுவனங்களும்  பங்குபற்றவுள்ளதுடன் அனைத்து துறைகள் தொடர்பான பொருட்களும் காட்சிக்குட்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக கலந்துரையாடலொன்று இன்று காலை 9 மணியளவில் யாழ் பொதுசன நூலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம், வட மாகாண ஆளுநரின்  செயலாளர் இளங்கோவன், யாழ் மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்  மற்றும் வங்கி முகாமையாளர்கள் வர்த்தகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில்  இந்திய துணைத்தூதுவர் உரையாற்றுகையில்,

2014 ஏப்ரல் மாதத்தில் யாழிற்கு புகையிரத சேவை வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 2014 செப்ரம்பர் மாதத்தில் காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் அரியாலை கைத்தொழில் பேட்டை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதனால் யாழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இது பலரது எதிர்பார்ப்புக்களை கொண்டிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அனைவரும் வர்த்தகக் கண்காட்சியில் கா
ட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அனைத்தையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad