24 ஜன., 2014

நுளம்புவலை கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 12 வயது சிறுமி பலி! கிளி.வட்டக்கச்சியில் சம்பவம்!
நுளம்பு வலைக்கு கட்டுப்பட்டிருந்த கயிறு இறுகிய நிலையில் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் கீர்த்தனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மேற்படி பகுதியிலுள்ள குறித்த சிறுமி நேற்று வியாழக்கிழமை கட்டிலில் படுத்துக்கொண்டு நுளம்பு வலைக்கு கட்டப்பட்டிருந்த கயிற்றோடு விளையடிக் கொண்டிருந்த வேளையில், கயிறு குறித்த சிறுமியின் கழுத்தில் இறுகியுள்ளது.
இதனை அவதானித்த பெற்றோர் குறித்த சிறுமியை உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை சிறுமி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். ஜவாப்தீன் சடலத்தினை பிரேத பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கிளிநொச்சி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறுமியின் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.