24 ஜன., 2014

திருப்பதியில் மகளுடன் ரஜினி தரிசனம்
நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர்  திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினர். அவர்கள் 2 பேரும்  இரவு ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள்
, கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்றனர். சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் அவர்களுக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமிபடம் ஆகியவை வழங்கப்பட்டது.