24 ஜன., 2014

மன்னார் மனித புதைகுழியை பார்வையிடச் சென்ற செல்வம் எம்.பி. திருப்பி அனுப்பப்பட்டார்!
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணிகள் இன்று இடம்பெற்ற போது  அவ்விடத்தை பார்வையிடச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மனித புதை குழி உள்ள நுழைவாயிலுக்கச் சென்ற போது பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பின்னர் பொலிஸார் நீதவானிடம் பாராளுமன்ற உறுப்பினரின் வருகை தொடர்பில் தெரியப்படுத்திய போதும் நீதவான் அரசியல்வாதிகளுக்கான அனுமதியை வழங்கவில்லை.
இதனால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திருப்பி அனுப்பப்பட்டார்.
இதேவேளை கடந்த வாரம் குறித்த மனித புதை குழி பகுதிக்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி என்.குணசீலனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அவரும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.