24 ஜன., 2014

மணிசங்கர் அய்யர் தடித்த நாக்கை அடக்காவிடால் .... : ஹெச்.ராஜா
மணிசங்கர் அய்யர் தடித்த நாக்கை அடக்காவிட்டால், பா.ஜ.கவின் நேரடி தாக்குதலுக்கு ஆளாவார் என்றார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா.நாகை மாவட்டம் திருக்கடையூரில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் ஹெச்.ராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர்,   ‘’10 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்த நாட்டில் எல்லா துறைகளிலும் பின்னடைவு செய்துவிட்டது என்றும், அதற்கு முக்கிய காரணம் நாட்டை முன்னேற்றுகினற் செயல் திட்டங்கள் இந்த அரசிடம் இல்லை என்றும் வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கரச் சாலை கொண்டு வந்ததைப் போல் அப்பாதையில் இந்தியாவில் 4 முக்கிய தலைநகரங்களை இணைத்து புல்லட் ரயில் திட்டத்தை கொண்டுவரவும், 100 புதிய நகரங்களை நிர்மாணிக்கவும், மோடி திட்டமிட்டுள்ளார் என்றும், மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்பது தவறு. அவர் ஆளும் குஜராத்தை இந்தியாவின் எந்த மாநிலத்தோடும் ஒப்பிடக்கூடாது.
சீனாவுடன் தான் ஒப்பிட முடியும் என்று உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன என்றும் தற்போது நாட்டின் உணவு பணவீக்கம் இரட்டை இலக்த்தில் உள்ளது. அதிலும் ராகுல்காந்தி போல ஒரு மக்கு பையனை வைத்துக் கொண்டு எவ்வாறு அப்படி காங்கிரசாரால் கூற முடிகிறது என்றும் மணிசங்கர் அய்யர் தனது தடித்த நாக்கை அடக்க வேண்டும்.
இல்லாவிட்டால் பாஜக தொண்டர்களின் நேரடி தாக்குதலுக்கு ஆளாவார் என்றும், மோடியை டீ விற்க சொல்லும் மணிசங்கர் அய்யர் சோனியாவை முன்பு லண்டனில் செய்த வேலையை செய்ய சொல்வாரா என்றும், இந்தியாவில் திறமையான பிரதமர் இருந்தால் தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்யாது என்றும் நிர்வாகத் திறமையில்லாத கெஜ்ரிவால் நடத்தும் போராடங்கள் கோமாளித்தனமானது.
மக்கள் அவரை நம்பி ஏமாந்துவிட்டனர் என்றும் இலங்கை பிரச்சனையில் சென்ற பாரதிய ஜனதா ஆட்சியில் எவ்வாறு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதோ அதே போல பேச்சு வார்த்தை நடத்தி இலங்கை தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.