புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவிற்கு எதிர் ப்பு தெரிவித்து, மத்திய  அரசு  மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.   மத்திய அரசின் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்.  


இதையடுத்து,  3 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.   3 பேரை விடுதலை செய்வது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை தமிழக அரசு 3 நாட்களில் 3 பேரையும் விடுதலை செய்யக்கூடாது.


 விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்.  விடுதலை தொடர்பாக தமிழக அரசு வழிமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும்.  
வழக்கு விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட அமர்வு.

விதிகளை மீறி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட  முதல்வர் ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ad

ad