புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கு தமிழ் கூட்டமைப்புக்கு அருகதையில்லை

நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்
நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் தவறான தகவல்களை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார். புலிகள் அழிக்கப்பட்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் அன்று விட்ட தவறு காரணமாகவே இன்று கூட்டமைப்பு நாட்டிற்கு எதிராக சர்வதேசம் செல்கிறது. எனவேதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றர்.

மாகாண சபை தேர்தல் செயற்பாடுகள், தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பு - 10 மருதானை, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.
பிரதியமைச்சர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் :-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கோப்பை தேனீர் கூட கொடுக்கவில்லை. மாறாக பாதுகாப்புப் படையினர் அந்த மக்களை பாதுகாத்து உபசரித்தனர். இந்நிலையில் தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கான எந்த அருகதையும் கூட்டமைப்பிற்கு கிடையாது.
மனித உரிமை மீறப்பட்டதாக கூறி ஐ. நா. மனித உரிமை பேரவையில் மூன்றாவது தடவையாக மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. சர்வதேசம் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் எமது நாட்டு மக்கள் இந்த தேர்தல்களின் மூலம் அவர்களுக்கு சிறந்த பதிலடியை வழங்கவுள்ளனர்.
ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் மனித விழுமியங்களுக்கு அப்பால் மனித உரிமைகள் மீறப்பட்டன. அங்குதான் முதலில் மனித உரிமைகள் தொடர்பில் பிரேரணை கொண்டுவர வேண்டும்.
இறுதி நடவடிக்கையின் போது சர்வதேச நாடுகள் கூறியவற்றைப் பொருட்படுத்தாது யுத்தத்தை முடித்தமைதான் இந்த சர்வதேச விசாரணைகள் தேவை. ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்பட வேண்டும் என்கின்றனர். நாங்கள் மனித உரிமைகளை மதித்ததினால்தான் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான படைவீரர்கள் இந்த தாய் நாட்டிற்காக உயிர் நீத்தும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அங்கவீனமுற்றனர்.
நாங்கள் மனித உரிமைகளை மதிக்காமல் செயற்பட்டிருந்த படைதரப்பில் இவ்வளவு உயரிழப்புக்கள் இன்று தவிர்த்துக்கொள்ள முடிந்திருக்கும். கடற் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டவர்கள் நாம். கடலில் என்ன நடந்திருந்தாலும் யாருக்கும் தெரிந்திருக்காது ஆனால் நாங்கள் அவ்வாறு நடக்கவில்லை. அவர்களை பிடித்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்தோம்.
அதேபோன்று கடற் புலிகளின் தலைவராக செயற்பட்ட சூசையின் மனைவியையும் பாதுகாத்தோம். இன்றும் அவர் வாழ்கின்றார். ஆனால் புலிகள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் செயற்பட்டனர்.
ஹிட்லர், பொல்பொட், முபாரக் போன்றவர்கள் அழிக்கப்பட்டதுடன் அவர்களது ஆதரவு கட்சிகளும் இல்லாதொழிக்கப்பட்டது. அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடைசெய்திருக்க வேண்டும் என்றார். தற்போது அதற்கான காலம் கடந்துவிட்டது. எனவேதான், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரப்பிரசாதத்தை பயன்படுத்திக் கொண்டு நாட்டிற்கு எதிராக செயற்படுகின்றனர் என்றார்.

ad

ad