புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

கொழும்பில் காணாமல்போனோர் குறித்து ஆணைக்குழு விசாரணை தேவையில்லை; அதன் தலைவர் தெரிவிப்பு 
கொழும்பில் வைத்து கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அவசியமில்லை எனத் தெரிவித்த காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, தனது அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக புத்தளத்திற்குச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தது.
 
கொழும்பு போன்ற இடங்களில் கடத்தப்பட்ட - காணாமற் போனோரின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். இங்கு சாதாரண முறையில் பொலிஸில் முறையிட்டே காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கலாம் என்றும் அது தெரிவித்தது.
 
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு நேற்றுமுன் தினம் கொழும்பு திரும்பியுள்ள காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத் தகட்ட நடவடிக்கை குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான  சம்பந்தன், "வடக்கு, கிழக்கு தவிர்ந்த வெளி மாவட்டங்களில் காணாமற் போனோரின் உறவுகள் சாட்சியமளிக்க அனுமதிக்காமை ஆணைக்குழுவின் குறைபாடு என்று சுட்டிக்காட்டியுள்ளமை தொடர்பிலும் வினவியபோதே ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் எமது விசாரணைகள் அனைத்தும் சுமுகமான முறையில் பூர்த்தி செய் யப்பட்டுள்ளன. எமக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள், சாட்சியங்கள் தொடர்பிலான விசாரணைகளை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.
 
அத்தோடு, எமது அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக புத்தளத்திற்குச் செல்ல நாம் தீர்மானித்துள்ளோம். காரணம், யாழில் எமக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில், குறிப்பாக முஸ்லிம் மக்கள் தொடர்பாக கிடைக்கப் பெற்றவைகளில் புத்தளத்தில் அதிகளவு கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
 
அதனால், ஆணைக்குழுவின் முதலாவது, இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­விடம் ஒப்படைத்ததன் பின்னர் புத்தளத்திற்குச் சென்று முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளலாம் என நாம் தீர்மானித்துள்ளோம்'' என்றார்.
 
அதேவேளை சம்பந்தனின் கருத்துத் தொடர்பில் அவர் பதிலளிக்கையில்,
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எமது ஆணைக் குழுவிற்கு வடக்கு, கிழக்கு தவிர்ந்த வெளியிடங்களில் விசாரணை நடத்துவதற்கான அதிகாரமில்லை. அதுமட்டுமல்லாது, வடக்கு, கிழக்கு தவிர்ந்த பிற இடங்களில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமும் ஆணைக்குழுவிற்கு இல்லை.
 
ஏனென்றால் போர்க் காலத்தின் போது வடக்கு, கிழக்கிலேயே அதிகளவான மக்கள் கடத்தப்பட்டுள்ளனர். இங்கு பொலிஸ், இராணுவத்தினரால் காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை தனித்து நின்று  மேற்கொள்ள கடினம் என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதியால்  ஆணைக் குழு நியமிக்கப்பட்டது.
 
ஆனால், கொழும்பு போன்ற இடங்களில்  அப்படியல்ல. இங்கு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். இங்கு சாதாரண முறையில் பொலிஸில் முறையிட்டே காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கலாம்.
 
இதனால், எம்மை பொறுத்த வரை கொழும்பில் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக ஆணைக் குழுவொன்றை அமைத்து விசாரணை செய்ய வேண்டிய அவசியமே இல்லை'' என்றார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=636312661820646604#sthash.Dp3AbAlR.dpuf

ad

ad