-

20 பிப்., 2014

ஜனாதிபதி மகிந்தவின் பிரித்தானிய விஜயம் ரத்து
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி எதிர்வரும் 10ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய தின நிகழ்வுகளில் தலைமை தாங்கும் நோக்கி அங்கு செல்லவிருந்தார்.
இந்த நிலையில், உலக தமிழர் பேரவை வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு காரணமாக ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் ஏற்படலாம் என புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதை அடுத்து, பிரித்தானிய விஜயத்தை இரத்துச் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தவிர ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள நிலையில், லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக் கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தாக தெரியவருகிறது.
பொதுநலவாய அமைப்பின் வைர விழாவில் பங்கேற்க கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டனுக்குச் சென்றிருந்த போது, புலம்பெயர் தமிழர்கள் பெரும் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad