புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

எனது வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னிங்ஸ்

பிரன்டன் மெக்கல்லம் நெகிழ்ச்சி
முச்சதம் அடித்து முத்திரை பதித்த நியு+சிலாந்து அணித்தலைவர்; பிரன்டன் மெக்கல்லம் கூறியதாவது:- 94 ஓட்டங்களுக்குள்; 5 விக்கெட்டு களை இழந்த நிலையில், எனது ஆட்டம் அணிக்கு மிகவும் அவசிய மாக இருந்தது. நெருக்கடிக்கு மத்தி யில் சில அருமையான இணைப்பாட் டத்தை உருவாக்கினோம். அதன் பிறகு எங்களது துடுப்பாட்டம் நீண்டு கொண்டே போனது. சரிவில் இருந்து நிமிர்ந்து தொடரை கைப்பற்றியது மிகவும் திருப்தி
அளிக்கிறது.
ரசிகர்களின் கூட்டத்தை பார்க்காத வரை எனக்குள் எந்த பதற்றமும் இல்லை. ரசிகர்களின் வருகையை கண்ட பிறகு தான், அவர்களை குதூகலப்படுத்துவதற்கு எனது கையில் எவ்வளவு முக்கியமான பணி இருக்கிறது என்பதை உணர்ந்தேன். இந்த முச்சதம் நியு+சிலாந்து கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க சாத னையாகும். இதற்கு முன்பு இது போன்ற அனுபவம் ஒரு போதும் என க்கு ஏற்பட்டதில்லை. நிச்சயம் எனது வாழ்நாள் முழுவதும் இந்த பசுமை யான நினைவு நிலைத்து நிற்கும்.
சிறுவயதில் இருந்தே நியு+சிலாந்து கிரிக்கெட் அணியை பார்த்து வளர்ந்தவன் நான். மார்ட்டின் குரோவ் 299 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததை நான் பார்த்து உள்ளேன். அவர் அதில் 300 ஓட்டங்கள் மைல்கல்லை தாண்டியிருந்தால் வியப்புக்குரிய சாதனையாக இருந்திருக்கும்.
(4-வது நாள்),; (5-வது நாள்) ஒவ்வொருவரும் நியு+சிலாந்து நாட்டவர் ஒருவர் 300 ஓட்டங்கள் இலக்கை கடக்க வேண்டும் என்பதில் ரொம்ப ஆர்வமாக இருந்தனர். அதில் மார்ட்டின் குரோவும் ஒருவர். காலை உணவுக்காக வந்த போது, அவரை சந்தித்தேன். அப்போது முச்சதத்தின் மகத்துவம் குறித்து விவாதித்தார்.
அதன் பிறகே முச்சதம் என்பது எவ்வளவு பெரிய தருணம் என்பதை உண்மையிலேயே உணர்ந்தேன். இதே போல் ஸ்டீபன் பிளமிங்கிடமும் முந்தைய நாள் இரவில் பேசினேன். அவரும் நான் சாதனை படைக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் இருந்தார். நியு+சிலாந்து தரப்பில் அதிக ஓட்டங்கள்;கள் குவித்தவர்க ளின் பட்டியலில் குரோவும், ஸ்டீபன் பிளமிங்கும் முதல் இரு இடங்களில் இருந்தனர். இப்போது இவர்களை நான் கடந்தது தான் கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கிறது.
ஏனெனில் நான் பெரிய துடுப்பாட்டவீரன் கிடையாது. அவர்களின் திறமையுடன் ஒப்பிடும் போது, நான் அவர்களை நெருங்க கூட முடியாது. எது எப்படியோ ஒரு வழியாக நியு+சிலாந்து வீரர் ஒருவர் 300 ஓட்டங்களை எட்டியதில்லை என்ற குறையை போக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் மேலும் சில நியு+சிலாந்து வீரர்கள் இந்த சாதனையை படைப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு பிரன்டன் மெக்கல்லம் கூறினார்.

ad

ad