புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

கீதா குமாரசிங்க திருமணம் செய்து கொள்ளுமாறு அழைத்தால் ஏற்க மாட்டேன்!- மங்கள சமரவீர - கீதா பதில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எல்பிட்டிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளரான நடிகை கீதா குமாரசிங்க, தன்னை திருமணம் செய்து கொள்வதாக யோசனை முன்வைத்தால் அதனை தான் ஏற்றுக்கொள்ள போவதில்லை என ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மாத்தறையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கீதா குமாரசிங்க அப்படியான திருமண யோசனையை என்னிடம் முன்வைப்பாரா என்பது சந்தேகம். கீதாவுக்கும் எனக்கும் ஒரே வயது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் நடிகை நதீஷா ஹேமமாலிக்கு உருவத்திற்கு ஏற்ற அறிகை கடவுள் கொடுத்துள்ளார். நானே ஹேமமாலியை அரசியலுக்கு கொண்டு வந்தேன்.
ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் நடிகை அனார்கலி நான் வெளிவிவகார அமைச்சராக இருந்த போது மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். ஆனால் நான் அனார்கலியை அரசியலுக்கு கொண்டு வரவில்லை.
அனார்கலிக்கு நான் அவதூறு ஏற்படுத்த போவதில்லை. அவரது கட்சியினரை அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்றார்.
மங்கள சமரவீரவுக்கு கீதா குமாரசிங்கவின் பதில்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தன்னை விட இரண்டு வயது மூத்தவர் என பிரபல நடிகையும் ஆளும் கட்சியின் தென் மாகாண சபை வேட்பாளருமான கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் மங்கள அண்ணாவுக்கு எதுவும் கூற மாட்டேன். காரணம் அவர் எனக்கு உடைகளையும் தைத்து கொடுத்துள்ளார். அவர் சிறந்த ஆடை அலங்கார நிபுணர்.
மங்கள அண்ணன் விரும்பியபடி வாழ இந்த ஜனநாயக நாட்டில் இடமுள்ளது. அத்தோடு மங்கள அண்ணாவை போல் உடைகளை தைத்து கொடுத்த ஒருவரின் திருமண யோசனையை எப்படி ஏற்பது.
நான் மக்களுக்கு சேவை செய்ய என்னை அர்ப்பணித்துள்ளதால், புதிய திருமண பந்தம் குறித்து சிந்திக்க நேரமில்லை. மங்கள அண்ணன் மிக நல்லவர். அவருக்கு நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். அவர் அவரது போக்கில் போகட்டும். நான் எனது போக்கில் போகிறேன் என கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ad

ad