புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2014


ராஜபக்சவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தால் ஏற்றுக் கொள்வார்களா?- 3 பேரின் விடுதலைக்கு எதிராக அறிக்கை
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில், 7 பேரின் விடுதலைக்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ராஜீவ் காந்தியுடன் அப்பாவித் தமிழர்களையும் கொடூரமாக கொலை செய்த கொலையாளிகளை மன்னிக்க முடியுமா.. மறக்க முடியுமா? தமிழர்களே சிந்திப்பீர் என்று சிவகங்கை மாவட்ட காங்கிரஸார் நான்கு பக்க துண்டறிக்கையை விநியோகித்து வருவதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் காட்சி, குண்டு வெடிப்பில் பலியான தியாகி லீக் முனுசாமி, சந்தாணிபேகம், போலீஸ் சூப்பிரண்டு டி.கே.எஸ். முகமது இக்பால், இன்ஸ் பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப் ஆகியோரது படங்களையும் பிரசுரித்துள்ளனர்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ராஜீவ் கொல்லப்பட்டபோது பலியானவர்களுக்கு குழந்தை குட்டிகள் இல்லையா? மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் தமிழர்கள் என ஒரு பிரிவினர் கோஷம் போடுகின்றனர். அப்படியானால், ராஜீவோடு இறந்தவர்கள் மட்டுமென்ன சிங்களவர்களா?
குற்றவாளிகளை குற்றவாளியாகப் பார்க்காமல் இன அடையாளங்களை கொடுத்துக் கொண்டிருந்தால் யாரையும் தண்டிக்க முடியாது. ஆட்டோ சங்கரும் சந்தன வீரப்பனும் தமிழர்கள்தான். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்தால் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனைக்குள் ளான நெடுஞ்செழியன் உள்ளிட்ட மூவரும் தமிழர்கள்தான். அவர் களையும் விடுவித்து விடலாமா?
மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதே வழக்கறிஞர்கள் ராஜீவ் கொலை நடந்த சமயம் கொலையாளிகளுக்காக ஆஜராக மறுத்தார்கள். அவர்களுக்காக ஆஜரான வக்கீல் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மரண தண்டனை என்பதெல்லாம் காட்டுமிராண்டித் தனம் என்று கொலையாளிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் சொல்கிறார்கள். இவர்களது நோக்கம் மரண தண்டனையை ரத்து செய்வதல்ல. அது தான் நோக்கம் என்றால் அப்சல் குருவுக்கும் அஜ்மல் கசாப்புக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது ஏன் மௌனமாக இருந்தார்கள்?
இப்படி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனையை ரத்து செய்து கொண்டிருந்தால் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்காது சட்டாம் பிள்ளைகளின் ஆட்சிதான் நடக்கும். மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற நிலை இருக்கும்போதே படுபாதக செயலை செய்யத் தயங்காதவர்கள், அதை ரத்து செய்துவிட்டால் எந்த அட்டூழியத்தையும் செய்யத் துணியமாட்டார்களா?
பயங்கரவாதிகளை பழிவாங்குவதாகச் சொல்லி தமிழர்களை கொன்று குவித்ததாக இலங்கை அதிபர் ராஜபக்ச மீது ஒருவேளை, குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு சர்வதேச நீதிமன்றம் ஆறு மாத சிறை தண்டனையும் 600 ரூபாய் அபராதமும் விதித்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ad

ad