புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

மாயமான  விமானத்தின் விமானி என் உறவினர் தான்-எதிர்கட்சி தலைவர்


கோலாலம்பூரில்  இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. விமானம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்க வில்லை. மாயமான விமானம்  விபத்தில் சிக்கியதா? தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதா? அல்லது நாசவேலையால் சிதைக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது. விமானம் மாயமாகி
10 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்தவித முடிவுக்கும் வர முடிய வில்லை.
விமானம் அரிஅசியல் காரணங்களுக்காக கடத்தபட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. இங்கிலாந்து பத்திரிகை ஒன்று அரசியல் காரணங்களுக்காக தலைமை பைலட் ஷா விமானத்தை கடத்தி இருக்கும் சாத்திய கூறுகள் உள்ளதாக  செய்தி வெளியிட்டு உள்ளது.தலைமை பைலட் அரசியலில் ஆர்வமாக இருந்து உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமின் ஆதரவாளராக இருந்து உள்ளார் எனவும் தெரிவித்து உள்ளது.
எதிர்கட்சி தலைவர் இப்ராஹிம்  ஹோமோ செக்சுவல் வழக்கில் அவருக்கு நீதிமன்றம் 5 வருட சிறை தண்டனையை உறுதி செய்தது இதனால் இதனால் தலைமை விமானி மிகவும் மனவருத்ததில் இருந்திருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் அஞ்சுகிறது.
இந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் இப்ராஹிம் தலைமை பைலட் ஷா தனது மருமகனுடன் தொடர்புடையவர் என்பதை ஒப்புகொண்டு உள்ளார். மேலும் சுப்ரீம் கவுன் சில் உறுப்பினரும் சுபாங் எம்.பி.யுமான  சிவராசாவின் நெருங்கிய நண்பராவார் என அனவர் பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம்  தெரிவித்தார்.
இந்த நிலையில்  தென் சீன் பத்திரிகை ஒன்று வெளியிட்டு உள்ள செய்தியில் எதிர்கட்சி தலைவர்  அன்வர் எனக்கு பெயரை நினைவு கூற முடியவில்லை ( ஜகாரியா) ஆனால் போட்டாவை பார்க்கும் போது ஞாபகம் உள்ளது.அவரை கட்சி கூட்டங்களில் பார்த்து உள்ளேன்.என கூறி உள்ளார்.
எனக்கு தனிப்பட்ட முறையில்  அவருடன் தொடர்பு இல்லை.ஆனால் அவர் எனது டுவீட்டர் சமூக வலைதளத்தில் என்னை தொடர்பவராக இருந்து உள்ளார். என கூறினார்

ad

ad