புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

ஜெனீவாவின் பரபரப்பான நாட்கள் .இன்றும் நாளையும் சிறிலங்காவுக்கு எதிரான மூன்று கூட்டங்கள்

சிறிலங்காவுக்கு எதிராக முன்வைத்துள்ள தீர்மான வரைவு குறித்து, ஜெனிவாவில் இன்று அமெரிக்கா பகிரங்க முறைசாரா கலந்துரையாடலை நடத்தவுள்ள நிலையில், இன்றும் நாளையும் இரண்டு மேலும் இரண்டு முறைசாராக் கூட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட தீர்மான வரைவு குறித்து, இன்று காலை 10 மணி தொடக்கம், 12 மணி வரை, கலந்துரையாட வருமாறு அமெரிக்க வதிவிடப் பிரதிநிதியால் உறுப்பு நாடுகள் மற்றும் மனிதஉரிமை அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மற்றொரு முறைசாரா கலந்துரையாடல் இன்று பிற்பகல், 2 மணி தொடக்கம், 4 மணி வரை, சிறிலங்காவில் மனிதஉரிமைகள் என்ற தலைப்பில், நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தை, அச்சுறுத்தலுக்குள்ளான மக்கள் சமூகம் என்ற மனிதஉரிமை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

அதேவேளை, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து நாளையும் மற்றொரு கூட்டம் நடத்தப்படவுள்ளது.

நாளை மதியம், 12 மணி தொடக்கம் 2 மணி வரை 21வது இலக்க அறையில் நடக்கவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிடையே, இந்த ஆண்டு சிறிலங்கா அரசுக்கு சார்பான இணைக் கூட்டங்கள் ஏதும் ஜெனிவாவில் இதுவரை நடத்தப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கமோ அல்லது சிறிலங்கா அரசுக்கு சார்பான நாடுகள் அல்லது நிறுவனங்களோ கூட இத்தகைய கூட்டங்களை ஒழுங்கு செய்யவில்லை.

அதேவேளை, சிறிலங்கா அரசின் குழு, பிராந்திய ரீதியாக நாடுகளின் பிரதிநிதிகளை அழைத்து, கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad