புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

ம.தி.மு.க வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியீடு!
 பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
 
பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு 7 தொகுதிகள் ஒ
துக்க முடிவாகியுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு பேச்சு வார்த்தை நீடிப்பதால் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சியின் மேலிடம் தயாரித்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ம.தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு உயர் நிலைஆட்சி மன்ற குழு, அரசியல் ஆய்வுக் குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சு முடிந்தும் இன்று இரவு அல்லது நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்நிலையில், ம.தி.மு.க. வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் - வைகோ
ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் மாசிலாமணி
காஞ்சிபுரம் - மல்லை சத்யா
ஈரோடு - கணேசமூர்த்தி
தேனி - அழகு சுந்தரம்
தூத்துக்குடி - வக்கீல் ஜோயல்
தென்காசி - டாக்டர் சதன் திருமலை குமார்

ad

ad