புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014


அ தி முக  நடிகர் அணி பிரசாரத்துக்குத்  தயார் 
வெயில் காலத்தில் அக்னி நட்சத்திரங்கள் தோன்றுவது இயல்பு. சூடான காலத்தில் சுவையைக் கூட்டுபவர்கள் இந்த நடிகர்கள்தான். நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஜெயலலிதா பிரசாரத்துக்குக்கிளம்பியதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக அ.தி.மு.க-வில் அங்கம் வகிக்கும் நடிகர்கள், நடிகைகள் பிரசாரத்துக்குத் தயாராகிவிட்டனர்.
 இவர்களிடம் என்ன பேசப்போகிறீர்கள் என்று கேட்டோம்:
செந்தில்: ''தி.மு.க-வில் காசு இருந்தால்தான் சீட் என்ற நிலை உள்ளது. மீதிக் கட்சிகள் குடும்பத்துக்காக செயல்படுகின்றன. காங்கிரஸ் அரசில் விலைவாசி உயர்ந்துகிட்டுப் போகுது. 2ஜி, காமன்வெல்த் என ஊழலும் அதிகமாகி இருக்குது. விஜயகாந்தைப் பத்தி மக்களுக்கு நல்லா தெரிஞ்சிருச்சு. அ.தி.மு.க. சப்போர்ட்லதான் சட்டசபைத் தேர்தல்ல ஜெயிச்சாங்க. இப்போ அந்தக் கட்சியில் எம்.எல்.ஏ. எண்ணிக்கைக் குறைஞ்சிட்டு இருக்கு. இந்தியா வல்லரசாக
மாறணும்னா அம்மா பிரதமராக வேண்டும். அமைச்சர் ப.சிதம்பரம் ஊழலை ஒழிப்பதாகப் பேசுகிறார். காங்கிரஸ் ஆட்சி ஒழிந்தாலே ஊழல் ஓழிந்துவிடும்.''
பொன்னம்பலம்: ''அம்மா பிரதமரானால் கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் பிரச்னை, தண்ணீர் பிரச்னை என அனைத்தும் தீரும். இந்தியா வல்லரசு நாடாக மாறும். கடன் சுமை குறையும். தி.மு.க., காங்கிரஸ் எம்.பி-க்கள் பலருக்கு நாலு வார்த்தை இங்கீலிஷில் பேசத் தெரியவில்லை, ஆனால் அம்மாவுக்கு மொழிப் பிரச்னை இல்லை.''  
சிங்கமுத்து: ''பிரதமராகும் தகுதி அம்மாவுக்கு மட்டும்தான் உள்ளது. காங்கிரஸ் ஊழலில் தி.மு.க-வுக்குப் பங்கு உள்ளது. விஜயகாந்த் நாக்கை மடிப்பதாலும் வேட்டியை மடிச்சுக் கட்டுவதாலும் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழலை ஒழிக்க நிர்வாகத்திறன், ராஜதந்திரம் தேவை. சினிமாவில் நடிப்பதைப்போல நாட்டைத் திருத்த முடியாது.''  
குயிலி: '' அம்மா ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் ஆசையே அம்மாவின் ஆசையாக இருக்கிறது. ஏழு மொழிகளில் சரளமாகப் பேசுபவர்கள் அம்மா. இதனால் இந்தியாவை ஆட்சி நடத்துகிற திறமையும், தகுதியும் அம்மாவுக்கு மட்டும்தான் உள்ளது''
விந்தியா: ''காஷ்மீர் போனால் கவலைப்படுகிறது காங்கிரஸ் கட்சி. தமிழக மீனவர்களின் காஷ்மீர் கச்சத்தீவு. அதை மீட்க... சிந்தாமல், சிதறாமல் அ.தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள். மண் குதிரையை நம்பி தி.மு.க-வும், கனவுக் குதிரையில் காலின்றி களமிறங்குகிறது காங்கிரஸ், தண்ணிக் குதிரையை நம்பி களமிறங்குகிறது பா.ஜ.க. ஆனால், வெற்றிக் குதிரையான அம்மாவை நம்பி காட்டாற்றை கடக்கிறது அ.தி.மு.க.'
ஆனந்தராஜ்: ''தி.மு.க. குடும்பத்திலேயே மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளன. அவற்றை முடித்துவிட்டு நாட்டு பிரச்னைக்கு அவர்கள் வரட்டும். தே.மு.தி.க. மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டது. தேர்தலுக்குப் பிறகு விஜயகாந்த்தைத் தவிர மற்ற எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அ.தி.மு.க-வில் சேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. விலாசத்தைத் தொலைத்த கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.''  
குண்டு கல்யாணம்: ''மத்திய அரசில் ஊழல் மலிந்துவிட்டது. மத்தியில் பல ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க., தமிழக மக்களுக்கு சொல்லக்கூடிய வகையில் எதையும் செய்யவில்லை. தே.மு.தி.க. ஒரு டம்மி பீஸ். அந்தக் கட்சி நிலையானதாக இல்லை. விஜயகாந்தின் நடவடிக்கைகள் மக்களுக்குத் தெரியும். அ.தி.மு.க-வைத் தோளில் சுமந்ததாகக் கூறும் விஜயகாந்துக்கு அந்தக் கட்சியின் வெயிட் தெரியவில்லை. அப்படி தெரிய வேண்டும் என்றால், என்னை ஐந்து நிமிடங்கள் விஜயகாந்த் தோளில் தூக்கிவைத்து தெரிந்துகொள்ளட்டும்.''  

ad

ad