புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014



திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவியுடன் உல்லாசம்; மாணவருக்கு பரிசோதனை நடத்த போலீசார் முடிவு
கோவை நகரிலுள்ள சின்னியம்பாளையம், “டீச்சர்ஸ்” காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில்
படித்து வருகிறார். அதே கல்லூரியில் பல்லடம் அருகிலுள்ள வடுகம்பாளையத்தை சேர்ந்த மாணவி பவித்ரா (20), (மாணவியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் படித்து வருகிறார்.

சீனிவாசன்-பவித்ரா இருவரும் ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகினர். பின்னர் அவர்களின் நட்பு காதலாக மலர்ந்தது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்துவந்துள்ளனர்.
இந்த நிலையில் சீனிவாசன், கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி, தனது பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறி, அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சீனிவாசனின் பெற்றோர் இல்லாததால், அதனை சாதகமாக பயன்படுத்திய சீனிவாசன், அந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தைகளை கூறி நம்பவைத்துள்ளார். சீனிவாசனின் நடவடிக்கைகளையும், அவரது பேச்சையும் நம்பிய அந்த மாணவி சீனிவாசனின் ஆசைக்கு உடன்பட்டுள்ளார். 
இதன் பின்னர், சீனிவாசன் அந்த மாணவியை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த மாணவி, சீனிவாசனிடம் ஏன்? இப்படி நடந்து கொள்கிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் வேறு ஒரு இளம்பெண்ணை காதலிக்கிறேன். ஆகவே அவளைத்தான் திருமணம் செய்யப்போகிறேன். ஆகவே நீ நடந்ததை எல்லாம் கனவாக நினைத்து மறந்து விடு என்று கூறி விட்டு சென்று விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்போவதாக கூறினார். போலீசுக்கு சென்றால், இருவரும் உல்லாசமாக இருந்த படத்தை “பேஸ்புக்கில்” வெளியிட்டு கேவலப்படுத்தப்போவதாக மாணவர் சீனிவாசன் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அந்த மாணவி, கோவை கிழக்குப்பகுதி மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மகளிர் போலீசார், சீனிவாசன் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், கற்பழித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இதற்கிடையில் சீனிவாசன் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். இதனால் போலீசார் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. சீனிவாசன் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளதையொட்டி, மாணவர் சீனிவாசனை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து ஆண்மை பரிசோதனை நடத்தவும், மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் மகளிர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ad

ad