புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014


உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழர்களுக்கு உரிமையில்லையா?: பா உ .சிறீதரன் 
போர்க்காலத்தில் உயிரிழந்த சொந்தங்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த தமிழ் மக்களுக்கு உரிமை கிடையாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர் இடம்பெற்றக் காலத்தில் லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
போர்க் காலத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை.
இன்னமும் தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியா செல்கின்றனர்.. வடக்கில் இயற்கை அழிக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்க அமைச்சுக்கள் திணைக்களின் சில அபிவிருத்தித் திட்டங்களினால் இயற்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெறுகின்றது. வடக்கில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமென சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

ad

ad