புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014

பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் நீக்கம்: ஐ.நா. சபை கூட்டத்தில் அறிக்கை 
news
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தபோது, சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 
வாடிகன் நகரின் சார்பில் அதன் ஐ.நா. தூதர் ஆர்ச்பிஷப் சில்வானோ தொமாசி கலந்து கொண்டார். அப்போது, பாலியல் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பித்தார்.
 
அதில், 'கடந்த 10 ஆண்டுகளில் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2,572 பேருக்கு சிறிய அளவிலான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன" என கூறப்பட்டுள்ளது.
 
மேலும், அந்த அறிக்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருடம் வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad