புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014

ந்திரசிறியை பதவிலியிருந்து விலக்குவதற்கு சூழ்ச்சி- தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணி 
வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை பதவிலியிருந்து விலக்குவதற்கு சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாக தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உள்ளிட்ட தேசிய இயக்கங்களின் ஒன்றியம் இன்றைய தினம் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர் அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் புதிய ஈழத்தை தோற்றுவிப்பதற்கான ஆரம்ப முயற்சியாக தாம் கருதுவதாகவும், வட மாகாணத்தில் ஜீ.ஏ.சந்திரசிறி ஆளுநராக இருக்கும் வரையில் தமிழீழத்தை அமைப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்த ஏற்படுத்த முடியாது.

இந்தநிலையிலே, அவரை பதவி விலக்குவதற்கு வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த சக்திகள் உள்ளிட்ட தரப்புகள் சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றன.

இதற்கு உள்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒத்துழைத்து வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்

ad

ad