புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014

புலிகளை ஒருபோதும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க முடியாது 
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கோ, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதற்கோ எந்தத் தடையுமில்லை.இராணுவப் பேச்சாளர் 
 என்று தெரிவித்துள்ள இராணுவப்  பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபோதும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க
முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வு களை நடத்துவதற்கும், இறுதிப் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆலயங்களில் வழிபாடு நடத்துவதற்கும் இராணுவம் தடைவிதித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளனவே என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வியெழுப்பப்பட்டது. 
 
இதற்குப் பதிலளித்த பேச்சாளர்; ""அவ்வாறு நாம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு எந்தத் தடையுமில்லை. மே 18 ஆம் திகதி உயிரிழந்தவர்கள் நினைவாக ஆலயங்களில் கிரியைகள் மேற்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. 
 
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது அவர்களுடன் சேர்ந்தியங்கி கொல்லப்பட்டவர்களையோ  நினைவு கூருவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்படமாட்டாது'' என்று அவர் தெரிவித்தார்.

ad

ad