புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014


ஆங்கில  படத்தில் தமிழ்பாட்டு ரகுமான் இசையில் 
லகத்தின் எல்லைகளை தன் இசையால் இணைத்த தமிழன். மேலே... உயரே... உச்சியிலே இருந்தாலும், 'நான், எனக்கு’ என்ற வார்த்தைகளை இவரின் பேச்சில் தேட வேண்டியிருக்கும். கோடம் பாக்கத்துக்
கொடி, இன்று ஆஸ்கர் அகாடமி மெம்பர்ஷிப் வரை பறக்கிறது. இந்தியாவையும் பேஸ்பாலையும் மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கும் 'மில்லியன் டாலர் ஆர்ம்’ என்ற ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
'''மில்லியன் டாலர் ஆர்ம்’ ஒரு ஸ்போர்ட்ஸ் மூவியா?''
'''ஸ்லம் டாக் மில்லியனர்’க்குப் பிறகு அமெரிக்கப் படங்களுக்கு இசையமைக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. 'கப்பிள்ஸ் ரீ ட்ரீட்’, '127 ஹவர்ஸ்’, 'பீப்பிள் லைக் அஸ்’னு இப்படி நிறைய நிறைய! அதில் நான் செலக்ட் பண்ணினது '127 ஹவர்ஸ்’ மட்டும்தான். அது ஆஸ்கர் நாமினேஷன் வரை போனது. நாலு வருஷத்துக்குப் பின்னாடி திரும்ப ஒரு ஹாலிவுட் படம் பண்ணலாம்னு நினைச்சேன். அந்த சமயத்தில் வந்ததுதான், 'மில்லியன் டாலர் ஆர்ம்’. இது இந்தியாவில் நடக்கும் கதை, வால்ட் டிஸ்னி தயாரிப்புனு நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் படத்தில் இருந்தன. இது ஸ்போர்ட்ஸ் மூவிதான். ஆனால், உள்ளுக்குள்ள ரொம்ப அற்புதமான எமோஷன் இருக்கும். 'லகான்’ மாதிரினு சொல்லலாம். படத்தைப் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும்.''
'' 'கோச்சடையான்’, 'ஐ’ மாதிரி அப்பப்போ தமிழ்ப் படங்கள் பண்றீங்க. இருந்தாலும் நிறைய மிஸ் பண்றோம்னு தோணுதா?''
''நிச்சயமா! ஆனா, இன்னொரு பக்கம் உலகக் கலைஞர்களோட, சர்வதேசத் திறமையாளர்களுடன் வொர்க் பண்றது பெரிய வாய்ப்பு. இப்படி பல மொழிப் படங்கள் பண்ணப் பண்ணத்தான் அறிவு, மனசு விசாலமாகுது. உண்மையைச் சொல்லணும்னா, வெளியே வேலை பண்ணும்போது நிறையக் கத்துக்குறேன். இங்கேயும் கத்துக்கிறோம்தான். ஆனா, வெளியே வொர்க் பண்ணும்போது, டெக்னாலஜியில் நிறைய விஷயங்கள் தெரிய ஆரம்பிக்குது. இங்கே கத்துக்கிட்டதை அங்கே கொடுக்க முடியுது. அங்கே கத்துக்கிட்டதை இங்கே கொடுக்க முடியுது. கொஞ்ச நாள்களில் கலைஞர்களுக்கு இடையே உள்ள வேற்றுமை மெதுவா உடைஞ்சிரும். இது நல்ல விஷயம்!''
''இசையில் நிறைய விஷயங்களைப் பரிமாற்றம் செய்றீங்க.. அப்படி அதிகப் பாராட்டு வாங்கின விஷயங்கள் என்னென்ன?''
''அது நிறைய இருக்கு. இதோ இப்போ 'மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்தில் ஒரு தமிழ்ப் பாட்டே இருக்கு. படத்தின் இறுதியில் ஒரு பாட்டு கம்போஸ் பண்ணணும். என் ஆல்பங்களைக் கேட்டவங்களுக்கு 'என் சுவாசக்காற்றே’ படத்தில் வரும் 'திறக்காத காட்டுக்குள்ளே...’ பாட்டு பிடிக்கவே அவங்களே படத்தோட முடிவில் சேர்த்திட்டாங்க. ஒரு அமெரிக்கப் படத்தில் நம்ம தமிழ்ப் பாடல் இருக்கிறது சந்தோஷம்தானே..நானும் சரின்னு சொல்லிட்டேன்!''
''ஹாலிவுட்டில் உங்க வொர்க்கிங் ஸ்டைல் எப்படி இருக்கும்?''
''இங்கே சென்னையில் இருக் கும்போது, எனக்கு இசை பற்றி மட்டும்தான் தெரியும். ஆனா, அங்கே ஃபிலிம் மேக்கிங், ஸ்கிரிப்ட் ரைட்டிங்னு நிறைய விஷயங்களை நேரடியாப் பார்த்துக் கத்துக்கிறேன். இங்கே நான் ஸ்பாட்டில் உட்கார்ந்து கத்துக்க முடியாது. அது ஷூட்டிங்குக்கு இடைஞ்சலா இருக்கும். ஆனா, அங்கே அந்தப் பிரச்னை இல்லை. இப்படி ஸ்கிரிப்ட்டைக் கத்துக்கும்போது, இசையில் நல்ல இம்ப்ரூவ்மென்ட் கொடுக்க முடியுது!''
''உங்களுக்கு டைரக்ஷனில் ஆர்வம் உண்டு. எப்போ டைரக்டர் ரஹ்மானைப் பார்க்கலாம்?''
''நிறைய ஆர்வம் உண்டு. ஆனா, பண்ண மாட்டேன். இப்ப நான் மியூசிக் பண்ணினா, வருஷத்துக்கு அஞ்சு படம் பண்ணலாம். டைரக்ட் பண்ணினா, ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம்தான் பண்ண முடியும். அதனால் ஸ்கிரிப்ட் ரைட்டிங் மட்டும் எழுதும் ஐடியா இருக்கு. அதே மாதிரி உணர்வுபூர்வமான நல்ல படங்களையும் தயாரிக்கணும்!''
 
'''கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரி’ மூலமா ரொம்ப ஏழ்மையான குழந்தைகளுக்கு இசை கத்துக் கொடுக்கிறீங்க... இதற்கான விதை எது?''
''50 ஏழைக் குழந்தைகளுக்கு வயலின் வாசிக்கப் பயிற்சி தர்றோம். பசங்க பிரமாதமாப் படிக்கிறாங்க. பியானோ கிளாஸ்ல 80 பேர் படிக்கிறாங்க. இது ஒரு முதல் அடி. அடுத்த படினு சொல்லலாம். ரைமிங் சரியா இருக்கா? (சிரிக்கிறார்) ஒரு சின்ன விதை, மிகப் பெரிய மரமா வளர்ந்து பயன் அளிக்கும் இல்லையா? அந்த மாதிரி இது எங்களோட நல்ல முயற்சி. இது, எனக்கு அப்புறமும் வளரும்னு நம்பிக்கை இருக்கு. அது ரொம்ப முக்கியம். எப்பவோ யாரோ வெட்டிவைச்ச கிணத்தில் நாம தண்ணி எடுத்துப் பயன்படுத்துறோம்ல... அப்படி நாமளும் ஒரு கிணறை வெட்டி வைப்போமே... ஒரு மரம் நட்டு வைப்போமே!''
''நல்ல விஷயம்.. பசங்க வளர்ந்ததும் உங்க இசைக் குழுவில் வாசிக்கும் வாய்ப்பு தருவீங்களா?''
''எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாப் பண்ணணும். இப்பவே அவங்க டிராக் பாடுறாங்க. புரொஃபஷனலா வர்றது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ரொம்பப் பிரமாதமாப் பண்ணினாத்தான் அந்த வாய்ப்புகளை அவங்களுக்குத் தர முடியும்.
'கடல்’ படத்தில் 'மூங்கில் தோட்டம்...’ பாடின அபய், நம்ம ஸ்கூல் ஸ்டூடண்ட்தான்; அடுத்து ஃபராத். இப்படி அடுத்தடுத்து நம்ம பசங்க நிறையத் திறமைகளோடு வெளியில் வர்றதுதான் பெரிய சந்தோஷம்!’
''இப்படி பரபரனு ஓடிட்டே இருக்கீங்களே.. உங்களை உங்க மனைவியும் குழந்தைகளும் ரொம்ப மிஸ் பண்றாங்களா?''
''இது என் ஃபேமிலிக்கு நிச்சயம் ஒரு பிரச்னைதான். ஆனால், இந்த மாதிரி ஒவ்வொரு ஃபேமிலியும் செய்யும் தியாகங்கள்தான் ஒவ்வொரு மனுஷனையும் முன்னுக்குக் கொண்டுவரும். ஃபேமிலி எப்படி நிம்மதியா வெச்சிருக்காங்களோ... அதைப் பொறுத்துத்தான் ஒருத்தரோட முன்னேற்றம் அமையும். அந்த வகையில் நான் என் ஃபேமிலிக்கு ஆயிரம் நன்றி சொல்வேன்.''
''உங்க பசங்க என்ன பண்றாங்க... இசையில் அவங்களுக்கு எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்கு?''
''பசங்க இசை கத்துக்கிறாங்க. ஆனா, ஸ்லோவாக் கத்துக்கிறாங்க. ஸ்பீடு பத்தலை. ஓவர் செல்லம் கொடுக்கிறேன். அதனால்தான் ஸ்லோவா இருக்காங்கனு நினைக்கிறேன் (சிரிக்கிறார்). ஆனா, நிறைவாக் கத்துக்கிறாங்கனு நினைக்கிறேன். நாம எப்படிக் கத்துக்கொடுத் தாலும், அவங்க என்னவா வர்றாங்கனு முடிவு பண்றது இறைவனின் நாட்டம்தானே!'' - கைகளை மேலே உயர்த்திச் சிரிக்கிறார் இசைப்புயல்.

ad

ad