புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014

மன்னார் புதைகுழி வழக்கு யூன் 9 வரை ஒத்திவைப்பு 
மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் யூன் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மன்னார் புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி ஆனந்தி கனகரெட்னம் முன்னிலையில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

மன்றிற்கு ஆஜரான சட்டத்தரணிகளான ராஜகுலோந்திரன் மற்றும் நிறைஞ்சன் புதைகுழி உள்ள இடத்தில் மேலும் அகழ்வு பணிகளை தொடரவேண்டும். அருகில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் மனித எச்சங்கள் இருப்பாதாக தெரியவருகிறது. எனவே குறித்த கிணற்றை அகழ்வு செய்ய அனுமதி வழங்கவேண்டும்

மேலும் ஏற்கனவே எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை சர்வதேச நாடுகளின் சுயாதீனமான உதவியுடன் பகுப்பாய்விற்கு உட்படுத்தி அது தொடர்பான அறிக்கையை பெற அனுமதிக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இந்நிலையில் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி குறித்த வழக்கினை எதிர்வரும் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை குறித்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடிதண்ணீர் திட்டத்திற்கென மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் செல்லும் வீதியில் குழி வெட்டியபோதே 81 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad