புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014

புதிய பட்டதாரிகளுக்கு நியமனம் - சுகாதார அமைச்சு 
மருத்துவ துறைசார்ந்த 354 பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி நியமனம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 
 
இதற்கு தகுதியானவர்களை அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் அவற்றின் பிரதிகளுடன் நாளை வருகைதர வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.அத்துடன் வெளிநாட்டில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்கள் மருத்துவ பீடத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட மருத்துவச் சபையின் சான்றிதழுடன் சமூகமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளைக் காலை 9 மணி முதல் பொரளை மருத்துவ ஆய்வு கூடத்தில் இடம்பெறவுள்ளது.

ad

ad