புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2014


சாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க ஜெ., உத்தரவு
 கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு விவசாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் இன்று அமைச்சர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழகத்தில் நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடியினை மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (6.6.2014) எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், இரா.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நடப்பாண்டில், இதுவரை பெய்ய வேண்டிய மழை அளவான 161.8 மில்லி மீட்டருக்குப் பதிலாக 174.2 மில்லி மீட்டர் மழை கூடுதலாகப் பெறப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். 
இதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கியது போல், இந்த ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும். நீர் ஆதாரங்களிலிருந்து வயலுக்கு நீர் வீணாகாமல் கொண்டு செல்ல உதவும் வகையில், ஒவ்வொருவருக்கும் 600 அடி எச்.டி.பி.இ. குழாய்கள் 7000 விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.
டெல்டா பகுதிகளில் காவேரி நீர் பெறப்படும் போது, வாய்க்கால் பாசனம் மூலம் அதிக அளவு நெல் சாகுபடி மேற்கொள்ளும் பொருட்டு, 100 விழுக்காடு மானியத்தில் சமுதாய நாற்றங்கால் முன்னரே அமைத்து, வாய்க்கால்களில் நீர் பெறப்படும் சமயத்தில் நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நெல் நாற்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
டெல்டா பகுதிகளில் 100 விழுக்காடு மானியத்தில் நெல் நடவு இயந்திரங்களை 200 விவசாயிகள் குழுக்களுக்கு வழங்கி, நடவுப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். வேலையாட்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளதால், குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள பகுதிகளில் சரியான தருணத் தில் களையெடுத்து, உயர் மகசூல் பெற வழிவகை செய்யும் வகையில், 100 விழுக்காடு மானியத்தில் இயந்திரக் களையெடுக்கும் கருவிகள் 200 விவசாயக் குழுக்களுக்கு வழங்கப்படும். 
குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள பகுதிகளில் உயரிய தொழில் நுட்பங்கள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், உயர் மகசூல் தரும் இடுபொருட்களான நெல் நுண்ணூட்டக் கலவை, துத்தநாக சல்பேட் ஆகியவை தலா 1 லட்சம் ஏக்கர் பரப்பிளவிற்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.
உயிர் உரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள் தலா 50,000 ஏக்கர் பரப்பளவிற்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.  இதே போன்று, 60,000 ஏக்கர் பரப்பளவிற்கு ஜிப்சம் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும். 
மேற்காணும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு 32 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகளினால், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் மூலம் விவசாயிகள் கூடுதல் பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளவும், உயர் மகசூல் பெறவும் வழிவகை ஏற்படும்’’என்று கூறியுள்ளார்.

ad

ad