புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2014


விசாரணைக்குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாசை நியமித்தார் நவநீதம்பிள்ளை - சிறிலங்காவுக்கு அறிவிப்பு
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின்
இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாஸ் என்ற மனித உரிமை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த நியமனம் குறித்து நேற்றிரவு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.
ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுக்கு இவரை ஐ.நா விரைவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விசாரணைக் குழுவைத் தெரிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் அது இறுதிப்படுத்தப்படும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்ததாகவும், தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விசாரணைகள், இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணைகள் பத்து மாதங்களில் நிறைவடையும் என்றும் ஐ.நா தகவல்கள் கூறுகின்றன.
வரும் ஜூலைக்கும், நொவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில், சிறிலங்காவில் இந்த விசாரணைக்குழு களப் பயணங்களை மேற்கொள்வதற்கு ஐ.நா திட்டமிட்டுள்ள போதிலும், சிறிலங்கா இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த விசாரணைக் குழுவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad