புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2014


அமைச்சர் ரிசாட்டுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதிலடி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  சார்பாகப் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு நிச்சயம் முதலமைச்சர் பதவி வழங்கப்படும். இதில் யாருக்கும் எந்தவிட்டுக் கொடுப்பும் கொடுக்கத் தேவையில்லை என முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எதிர்வரும் 2015  பெப்ரவரி மாதம் ஸ்ரீ.ல.மு.கா சார்பாகப் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு நிச்சயம் முதலமைச்சர் பதவி வழங்கப்படும். இதில் யாருக்கும் எந்தவிட்டுக் கொடுப்பும் கொடுக்கத் தேவையில்லை என மத்திய குழு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க எங்களுடைய மரத்தின் ஓர் கிளையில் சிறிய இலைகளாய் இருந்து காய்ந்த சருகாக உதிர்ந்த அகில இலங்கை மக்கள் காங்ரஸ் என்ற அரசியலில் இன்று ஏட்டுச் சுரக்காவாக மாறியிருக்கும் சிறிய கட்சியின் தலைவர் ரிசாட் பதூர்தீன் அவர்கள் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
 கிழக்கு மாகாண முதலமைச்சராக ஸ்ரீ.ல.மு.காங்கிரஸிலிருந்து ஒருவரை நியமிப்பதற்கு எந்த ஆட்சேபினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அன்று எமது கட்சி கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என ஜனாதிபதியை கேட்ட போது முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் இன்று அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான கருத்துக்களை கூறுவது எமக்கு வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் உள்ளது.
இவர்கள் இவ்வாறு கூறுவதன் நோக்கம் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை அண்மையில் நடந்த தேர்தல்களிலே முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் ஆணையின் மூலம் சாதித்து காட்டியது.
எனவே முஸ்லிம் காங்கிரசுடன் ஓட்டிப் போனால் தான் நமது அரசியலை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதனாலும் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்தால்தான் தமது கட்சியின் மாகாண சபை உறுப்பினரான அமீர் அலியை மாகாண அமைச்சராக்க முடியும் என்பதுமே. இவர்களுடைய பகல் கனவு ஒருபோதும் பலிக்காது.
இவர்கள் ஒன்றும் எமக்கு எந்தவிட்டுக் கொடுப்பும் செய்யத் தேவையில்லை. எமது அரசியல் பாசறையில் பயின்று எமது காங்ரசால் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்த இவர்களுக்கே இவ்வளவு என்றால் இந்த பாசறையான எமது கட்சிக்கு எவ்வளவு இருக்கும். எமது கட்சியால் வளர்ந்து எமது கட்சிக்கு துரோகம் செய்த துரோகி சில்லறைகள்தானே இவர்கள்.
இரண்டரை வருடங்களின் பின்னர் எமது கட்சி சார்பில் முதலமைச்சரை எப்படி நியமிக்க வேண்டும் என்பது எமது தலைமைக்கு தெரியும். எங்கள் தலைவர் ஹக்கீம் அவர்கள் உங்களைப் போன்று சில்லறை அல்ல.
மறைந்த மாமேதை மர்ஹும் ஏ.எச்.எம். அஷ்ரப்பினால் தலைவனாக உருவாக்கப்பட்டு காய்த்த மரத்திற்குத் தான் கல்லெறி, பொல்லெறி போன்று எவ்வளவோ பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும் தனது சாணக்கிய அரசியலாலும் தன் திறமையினாலும் கட்சியை கட்சியாக வைத்திருக்கும் வல்லமை நிறைந்த தலைவன்.
எந்த இடத்தில் எப்படி காய் நகர்த்த முடியும் என்ற சாணக்கியம் எமது கட்சிக்கு தெரியும் உங்களைப் போன்று பனம்காட்டு நரிகளெல்லாம் எமக்கு கணக்கே இல்லை. எத்தனை காங்கிரஸ் வந்தாலும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே. எமக்கு எப்போதும் மக்கள் ஆணையுண்டு.
எனவேதான் இறைவன் துணையுடன் எமது கட்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் புதிய முதலமைச்சரை நியமிக்கும். அதற்கு மிகவும் பலமான ஒப்பந்தம் ஒன்றை ஜனாதிபதி ராஜபக்ச  அவர்களுடன் தலைவர் ஹக்கீம் செய்து வைத்திருக்கின்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் அவர்களே! அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான கருத்துக்களை கூறுவதை தயவுசெய்து நிறுத்துங்கள் மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு
திருகோணமலை

ad

ad