புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2014


உலகக் கோப்பையில் இந்தியா பின்னடைவு: வெளிநாட்டு பயிற்சியாளர் மீது தன்ராஜ் பிள்ளை பாய்ச்சல்
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் இரண்டு
லீக் போட்டிகளில் பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்தது. பின்னர் 3-வது ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் 1-1 என டிரா செய்ததால், ஒரு புள்ளி பெற்றது. இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றி பெறாத இந்திய அணி நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் மலேசிய அணியை வென்று முழு புள்ளிகளையும் பெறுவதில் தீவிரமாக உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை கூறுகையில், அணியின் மோசமான ஆட்டத்திறன் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், அணியில் உள்ள வெளிநாட்டு வல்லுநர்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

உயர் செயல்திறன் கொண்ட வெளிநாட்டு இயக்குனர் (ரோலண்ட் ஆல்ட்மேன்ஸ்) மற்றும் 8 மாதங்களாக பயிற்சியாளராக டெர்ரி வால்ஷ் ஆகியோர் நம்மிடம் இருக்கின்றனர். ஆனால் இவர்களால் இந்திய அணி பயனடைந்திருக்கிறது என நான் நினைக்கவில்லை. 

இப்போது இந்திய அணி தோல்வியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதுவே இந்திய பயிற்சியாளராக இருந்திருந்தால், அணியை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்பது தெரிந்திருக்கும். அனைத்து போட்டிகளிலும் நாம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்துள்ளோம். ஒரு புள்ளி பெற்றது அதிர்ஷ்டம் என்று வால்ஷ் கூறுகிறார். இது ஒரு பயிற்சியாளரின் சோகமான மனப்பான்மை என்றே நினைக்கிறேன்.

ஹாக்கி இந்தியா லீக் தொடரில் தனது தகுதியை நிரூபித்தும் சந்தீப் சிங் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படவில்லை. இது அவருக்கு எதிரான ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகும். கேப்டன் சர்தார் சிங், கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் சிறப்பாக விளையாடுகின்றனர்.

பெனால்டி கார்னரை கோலாக மாற்றுவதில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. சந்தீப் சிங் பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட். எனவே, நரீந்தர் பத்ரா யார் சிறந்த வீரர், யார் மோசமான வீரர் என்பதை பார்த்து அணிக்கு தேர்வு செய்ய வேண்டும். இது குடும்ப உறுப்பினர்கள் கொண்ட அணி அல்ல. சொந்தமாக முடிவுகளை எடுக்க முடியும் என்று ஹாக்கி கூட்டமைப்பு நினைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad