புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2014

கொன்சலிற்றாவின் தொலைபேசி அழைப்புக்களை சமர்ப்பியுங்கள்; பொலிஸாருக்கு மன்று உத்தரவு 
குருநகர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் கைத்தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு
பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குருநகர் பெரியகோயிலுக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி  சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பாரிய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மன்றில் தனது சாட்சியங்களை முன்வைத்தார்.

அதனையடுத்து கொன்சலிற்றாவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கொன்சலிற்றா இறப்பதற்கு 40 நாட்களுக்கு முன்னர் தொலைபேசியினைப் பயன்படுத்தவில்லை.

எனவே 2014 ஆண்டு தை,மாசி, பங்குனி ஆகிய மூன்று மாதங்களாக கைத்தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை தொலைத் தொடர்பு நிலையத்தில் பெற்றுக் கொள்ள மன்று உத்தரவிட வேண்டும் என கோரினர்.

அதனையடுத்து இரண்டு தரப்பு சட்டத்தரணிகளுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள்  ஏற்பட்டன. இருப்பினும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான அறிக்கை அவசியம் என்பதைக் கருத்திற் கொண்ட நீதவான் கொன்சலிற்றா இறப்பதற்கு முன்னர் மூன்று மாத காலத்திற்கான கைத்தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வழக்கு மீண்டும் யூலை 10 ஆம் திகதி மன்றுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad