புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014

அடையாளம் காண முடியாத 13 உடல்கள் மரபணு சோதனை : ஆந்திர அமைச்சர்

கட்டிட இடிபாடுகளில் பலியானவர்கள் உடல்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டு,

பிரேத பரிசோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுவரை 61 பேர் உயிரிழந்து விட்டனர். இதில் 58 பேர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 45 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. 13 உடல்கள் அடையாளம் காணமுடியாமல் ஆஸ்பத்திரியில் உள்ளது.

ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் 60 உடல்களை வைப்பதற்குதான் இடவசதி உள்ளது. ஏற்கனவே அங்கு சாலை விபத்து, தற்கொலை என பல்வேறு காரணங்களால் இறந்தவர்கள் உடல்கள் அடையாளம் காணமுடியாமல் உள்ளது.

இதனால் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் இருந்து இதுவரை 26 உடல்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடையாளம் காண முடியாத 13 உடல்கள் மரபணு சோதனை (டி.என்.ஏ) மூலம் அடையாளம் காணப்படும் என்றும் ஆந்திர மாநில வீட்டுவசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் கிம்முடி மிர்னாலினி தெரிவித்தார்.

ad

ad